ஆகாயத்தாமரை அகற்றும் கருவி! - மாணவனின் அசத்தல் முயற்சி!

கண்டுபிடிப்பு மு.ராஜேஷ், படங்கள்: க.மணிவண்ணன்

* இது முழுக்க முழுக்க சூரிய ஒளியில் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. 

* இந்தக் கருவி மூலமாக பிளாஸ்டிக் கழிவுகளையும் அகற்றலாம்.

ரி, குளம், குட்டை உள்ளிட்ட நீர்நிலைகளில் ஆகாயத்தாமரை அடர்ந்து இருப்பதைப் பார்த்திருப்போம். இதை அகற்றுவதற்கு அரசு சார்பில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், பெரும் பொருட்செலவு காரணமாக ஆகாயத்தாமரையை அகற்றுவதில் பின்னடைவு ஏற்படுகிறது.

இந்நிலையில், நீர்நிலைகளில் உள்ள ஆகாயத்தாமரையை அகற்றுவதற்காக கருவி ஒன்றைக் கண்டுபிடித்து அசத்தி இருக்கிறார் ஊட்டியைச் சேர்ந்த 11-ம் வகுப்பு மாணவர் அருண். இது சம்பந்தமாக அவரிடம் பேசியபோது, ‘‘புதுசு புதுசா ஏதாவது பொருளைக் கண்டுபிடிக்கறதுல எனக்கு ஆர்வம் அதிகம். இதுக்கு முன்ன பெட்ரோல், டீசலுக்கு பதிலா தண்ணியிலேயே இயங்குற மாதிரியான வாகனத்தை உருவாக்கினேன். இந்த வாகனத்துல பொருத்துற இன்ஜின், தண்ணியில் இருக்கிற ஹைட்ரஜன், ஆக்சிஜன் மூலக்கூறுகளைப் பிரிச்சு, இயங்குற மாதிரி வடிவமைச்சிருந்தேன். இந்தக் கண்டுபிடிப்புக்கு, மாவட்ட அளவுல நடந்த அறிவியல் கண்காட்சியில் முதல் பரிசும், மாநில அளவுல ரெண்டாவது பரிசும் கிடைச்சது.

இதேபோல, கடல்ல மீன்பிடிக்கப் போற மீனவர்கள் எல்லை தாண்டுறதைத் தடுக்கக் கூடிய கருவியையும் கண்டுபிடிச்சிருக்கேன். இதுக்கு, மாநில அளவுல நாலாவது பரிசும், மாவட்ட அளவுல ரெண்டாவது பரிசும் கிடைச்சது’’ என்று தனது கண்டுபிடிப்புகள் பற்றி பேசியவர், ஆகாயத்தாமரை அகற்றும் கருவி பற்றிச் சொல்லத் தொடங்கினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்