பயறு சாகுபடி செய்யலாம் வாங்க!

அழைப்பு விடுக்கும் ஆராய்ச்சி நிறுவனம் த.ஜெயகுமார், படங்கள்: அ.சரண்குமார்

ழக்கமாக வெங்காயம், தக்காளியின் விலை உயர்வுதான் மக்களை பாடாய்ப்படுத்தும். ஆனால், கடந்த ஆண்டு உச்சத்துக்கு போன பருப்பு விலையின் உயர்வு, மக்களை மட்டுமில்ல; அரசுகளையும் பயறு வகை தானியங்களின் மீதான கவனத்தைக் குவிக்க வைத்துள்ளது.

உலகளவில் பயறு வகை தானியங்களின் உற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும் நம்நாட்டின் தேவைக்கு ஏற்ப உள்நாட்டில் பயறு வகைகள் உற்பத்தி இல்லை என்பதுதான் உண்மை. இந்நிலையில் பயறு சாகுபடியை மேம்படுத்த, 2016-ம் ஆண்டை ‘சர்வதேச பயறு வகைகள் ஆண்டாக’ ஐக்கிய நாடுகள் சபை அறிவித்து செயலாற்றி வருகிறது. பயறு சாகுபடியை ஊக்குவிக்க அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் பல கூட்டங்களை நடத்தி வருகின்றன. அந்த வகையில் எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனமும் கடந்த ஆகஸ்ட் 7 முதல் 9-ம் தேதி வரை பயறு சாகுபடி குறித்து பல்வேறு தலைப்புகளில் சென்னை, தரமணியில்  உள்ள ஆராய்ச்சி நிறுவனத்தில் கருத்தரங்குகளை நடத்தியது. வேளாண் வல்லுநர்கள், விஞ்ஞானிகள், விவசாயிகள் என்று பலரும் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர்.

துவக்க நாள் நிகழ்வில் பேசிய எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி மையத்தின் முதன்மை விஞ்ஞானி செல்வம், “நெல், கோதுமை பற்றாக்குறை பிரச்னை 1960-களில் ஏற்பட்டது. அப்போது பஞ்சாபில் அறிமுகப்படுத்தப்பட்ட பசுமைப் புரட்சியால், உணவுப் பற்றாக்குறை பிரச்னை தீர்க்கப்பட்டது. தற்போது மக்களிடையே ஊட்டச்சத்து, நுண்ணூட்டச்சத்து குறைபாடும் பருப்பு பற்றாக்குறையும், நிலவி வருகிறது. பயறு வகை  தானியங்களின் உற்பத்தியை பெருக்கினால் இந்த பிரச்னைகளை எளிதாக தீர்க்கலாம்” என்றார்.

லெபனான் நாட்டைச் சேர்ந்த சர்வதேச வறட்சிப் பகுதி வேளாண் ஆராய்ச்சி மையத்தின் பொது இயக்குநர் மஹமத் சோல் பேசும்போது, “இந்தியாவில் 60-களின் மத்தியில் நிகழ்ந்த ஒரு புரட்சி, இப்போது நடைபெற வேண்டும். அதுதான் பயறு உற்பத்தி புரட்சி. பயறு வகை தானியங்களின் மூலம் ஊட்டச்சத்து பலன்கள் கிடைப்பதோடு, விவசாயிகளுக்கு வருமானமும் கிடைக்கிறது. வர்த்தக ரீதியாக விற்பனைக்கும் பயறு வகைகள் ஏற்றவை என்பதால் இந்திய விவசாயிகள் இதில் கவனம் செலுத்த வேண்டும். உலகளவில் 1.22 பில்லியன் மக்கள் ஊட்டச்சத்து பற்றாக்குறையோடு இருக்கும் சூழலில் பயறு வகைகளின் உற்பத்தி மிகவும் அவசியம்” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்