மணல் கொள்ளைக்கு நிரந்தர தடை வருமா?

எதிர்பார்ப்பில் ஸ்ரீவைகுண்டம் அணை பாசன விவசாயிகள்! இ.கார்த்திகேயன், படங்கள்: ஏ.சிதம்பரம்

தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அணை நூறு ஆண்டுகளுக்கு மேலாகத் தூர்வாரப்படாமல் இருக்கிறது என்பதைச் சுட்டிக்காட்டி, அணையைத் தூர்வார உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று, தி.மு.க மாநில இளைஞரணி துணைச் செயலாளர் ஜோயல், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதன் விளைவாக, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி பெற்று அணையைத் தூர்வார உத்தரவிட்டது பசுமைத் தீர்ப்பாயம். இதன்படி கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை முதல் ஸ்ரீவைகுண்டம் அணையைத் தூர்வாரும் பணி தொடங்கியது. ஆனால், ‘தூர்வாருகிறோம்’ என்ற பெயரில் மணல் கொள்ளைதான் ஜரூராக நடந்து வருகிறது. இந்த மணல் கொள்ளையை எதிர்த்து, ஸ்ரீவைகுண்டம் அணை பாதுகாப்பு போராட்டக்குழுவின் தலைவரும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணுவும், போராட்டக்குழுவின் செயலாளர் பாலசுப்பிரமணியனும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்த மனு, ஆகஸ்ட் 13-ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த தீர்ப்பாயம், ‘‘செப்டம்பர் 27-ம் தேதிவரை அணையைத் தூர்வார வேண்டாம்’’ என உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவைத் தொடர்ந்து, தூர்வாரும் பெயரில் மணல் அள்ளும் பணி நிறுத்தப்பட்டதோடு, மணலை அள்ளிச்செல்ல அமைக்கப் பட்டிருந்த தற்காலிக பாதையும் அடைக்கப் பட்டுள்ளது. இது விவசாயிகளுக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தாலும், ‘இது தற்காலிக சந்தோஷம் மட்டுமே, நிரந்தர மாக மணல் கொள்ளையைத் தடுத்து நிறுத்த வேண்டும்’ எனக் கோரிக்கை வைக்கிறார்கள் ஸ்ரீவைகுண்டம் அணை பாசன விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்