நல் வாழ்வியல் திருவிழா!

அ.அருணசுபா

லக சித்தர் அறக்கட்டளை மற்றும் வாஷிங்டன் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘உலக சித்தர் மரபு திருவிழா’, கடந்த ஆகஸ்ட் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில், சென்னை, எம்.ஜி.ஆர் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

சித்த மருத்துவத்தைப் பற்றி விழிப்பு உணர்வூட்டும் விதமாக மரபுக் கலை நிகழ்ச்சிகள், பாரம்பர்ய உணவுகள், பாரம்பர்ய விதைகள், மரபு விளையாட்டுகள், சித்த மருத்துவ முகாம், யோகப் பயிற்சிகள் என பல்வேறு நிகழ்வுகள் நடந்தேறின.

இந்த விழாவில் சிறப்புரையாற்றிய, தவத்திரு. மருதாச்சல அடிகளார், “இந்த விழாவை வெறும் சித்த மருத்துவ விழாவாக மட்டும் இல்லாமல் நல் வாழ்வியல் விழாவாக ஏற்பாடு செய்திருக்கிறார்கள். சித்த மருத்துவத்தின் மகத்துவம் உலகம் முழுக்க பரவி இருக்க வேண்டும். நம் நாட்டில் வாழ்ந்த சித்தர்கள் கண்டுபிடித்து சொன்ன மருத்துவ முறை அற்புதமானது. ‘உணவே மருந்து, மருந்தே உணவு’ என்று நம் முன்னோர்கள் வாழ்ந்தார்கள். இந்த வாழ்வியல் முறையை நாம் மறந்து போனதால்தான், நோய் நொடிகள் பெருகி வருகின்றன. இனியாவது விழித்துக்கொள்வோம். நமது மண்ணுக்கு சொந்தமான மரபைக் காப்போம். பிற நாட்டு மக்களும், பின்பற்றும் வகையில் நமது வாழ்வியல் முறை உள்ளது. இதை போற்றி பாதுக்காக்க வேண்டியது நம் ஒவ்வொருவரின் கடமை” என்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்