சரியான நேரம் இது!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

‘அனைத்து சாலைகளும் ரோம் நகரை நோக்கி செல்வதுபோல’ உலகம் முழுவதும் இயற்கை விவசாயத்தை நோக்கி செல்லத் தொடங்கியுள்ளது. நஞ்சில்லாத இயற்கை விவசாய முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்களை, போட்டிப் போட்டு  வாங்கிக்கொள்ள வளர்ந்த நாடுகளான கனடா, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்டவை காத்திருக்கின்றன. இந்தியாவில் இதுவரை முறையான இயற்கை விவசாயச் சான்றிதழ் பெறப்பட்ட நிலங்களின் அளவு சுமார் 50 லட்சம் ஹெக்டேர்தான். இதன்படி பார்த்தால், உலக அளவில் இயற்கை விவசாயம் செய்யும் நாடுகள் வரிசையில் இந்தியா 15-வது இடத்தில் உள்ளது.

இயற்கை விவசாய விளைபொருட்கள் சந்தையின் சர்வதேச மதிப்பு ஆண்டுக்கு 72 பில்லியன் அமெரிக்க டாலர் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. ஆனால், இந்தியாவிலிருந்து 2015-16-ம் ஆண்டுகளில் 10 லட்சம் டன் விளைபொருட்களை மட்டுமே ஏற்றுமதி செய்திருக்கிறோம். சுமார் 298 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்குத்தான் நமது பங்களிப்பு உள்ளது. பரந்து விரிந்த, உலக சந்தையில் இந்திய இயற்கை விவசாயப் பொருட்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. ஆனால், அதை அறுவடை செய்ய போதுமான வசதி வாய்ப்புகள் மற்ற நாட்டு விவசாயிகளை ஒப்பிடும்போது இந்திய விவசாயிகளுக்கு குறைவாகவே உள்ளது. அரசு... உள்ளிட்ட துறைகளின் ஆதரவு இல்லாமலேயே இந்தியாவில் இயற்கை விளைபொருட்கள் உற்பத்தி வேகமாக நடைபெற்று வருகிறது. எனவே, இயற்கை விவசாயப் பொருட்களை ஏற்றுமதி செய்யவும், இயற்கை விவசாயம் செய்யும் நிலப்பரப்புக்களை அதிகரிக்கவும் மத்திய, மாநில அரசுகள் முனைப்புக் காட்ட வேண்டிய நேரம் இது.

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்