குறைந்த செலவில்... நிறைவான லாபம் கொடுக்கும் கேழ்வரகு!

சந்தைக்கேற்ற சாகுபடி! லாப ஊருக்கு ஒரு வழிகாட்டி!துரை.நாகராஜன், படங்கள்: தே.சிலம்பரசன்

யல் விளைச்சலை அள்ளிக் கொடுத் திருந்தாலும்... சந்தையில் விலை கிடைத்தால்தான், லாபம் கிடைக்கும். ‘ஒவ்வொரு பயிருக்கும் எந்தப் பருவத்தில் நல்ல விலை கிடைக்கும்... சந்தையின் தேவை என்ன?’ என்பது போன்ற அடிப்படையான சில தகவல்களைத் தெரிந்துகொண்டால், ‘விலை இல்லை’ என்ற கவலையே இருக்காது. ஒவ்வொரு பயிருக்குமான சந்தைத் தகவல்களை அலசுகிறது, இத்தொடர். கடந்த இதழில் இடம்பிடித்திருந்த கேழ்வரகு குறித்த தகவல்களின் தொடர்ச்சி இங்கே...

 சிறுதானிய மகத்துவ மையத்தின் பேராசிரியை டாக்டர்.நிர்மலகுமாரி, கேழ்வரகினை பற்றி கூடுதல் தகவல்களை நம்மிடம் பகிர்ந்துகொண்டார். ‘‘முன்பெல்லாம் இத்தனை நோய்களோ, நோயாளிகளோ இல்லை. தற்போது பிணிகள் அதிகரிக்க காரணம் நமது உணவு முறை தான். தினமும் உணவுடன் கேழ்வரகை சேர்த்துக் கொண்டால் சர்க்கரை வியாதி, இதயநோய் மற்றும் சுண்ணாம்புச்சத்து பற்றாக்குறை போன்ற நோய்களில் இருந்து விடுபடலாம். மருத்துவர்களும் நோயாளிகளுக்கு கேழ்வரகு போன்ற சிறுதானியங்களையே பரிந்துரை செய்கிறார்கள். கேழ்வரகில் மற்ற தானியங்களைக் காட்டிலும் சுண்ணாம்புச்சத்து(கால்சியம்), இரும்புச்சத்து, புரதச்சத்து மற்றும் நார்ச்சத்து ஆகியவை அதிகமாக இருக்கின்றன. விவசாயிகள் பருவம் பார்த்து பயிரிட்டால் கேழ்வரகு இறவையைக் காட்டிலும், மானாவாரியில் அதிக லாபத்தைக் கொடுக்கும். ஆடி மற்றும் புரட்டாசி பட்டங்களில் கேழ்வரகை மானாவாரியாக பயிரிடலாம். செம்மண் மற்றும் இருமண் கலந்த மண்வகைகள் கேழ்வரகு பயிரிட மிகவும் ஏற்றவை. இயற்கை உரங்களைப் பயன்படுத்தி சாகுபடி செய்யும்போது நிலத்தின் ஈரப்பதம் நீண்டநாட்களுக்கு இருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்