குறைவான பராமரிப்பில் நிறைவான மகசூல்... குள்ளகார்...

ஒரு ஏக்கர், 30 மூட்டை!கு.ராமகிருஷ்ணன், படங்கள்: கே.குணசீலன்

சாயன விவசாயத்தில் நாளுக்கு நாள் இடுபொருட்களின் அளவை அதிகரித்துக்கொண்டே போனால் தான் ஓரளவுக்காவது மகசூலை தக்க வைக்க முடியும். ஆனால், இயற்கை விவசாயம் அப்படியல்ல. படிப்படியாக இடுபொருட்களின் அளவைக் குறைத்துக் கொண்டே வரலாம். இதனால் செலவு மற்றும் உழைப்பு குறையும். மகசூலின் அளவோ கூடிக்கொண்டே இருக்கும். இதனை நிரூபிக்கும் வகையில் குறுவைப் பட்டத்தில் குள்ளகார் சாகுபடி செய்து, மிகவும் குறைவான பராமரிப்பில் நிறைவான மகசூல் எடுத்து அசத்தியிருக்கிறார் நாகப்பட்டினம் மாவட்டம், மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார்.

விறுவிறுப்பாக நடைப்பெற்றுக் கொண்டிருந்த அறுவடை பணிகளைக் கவனித்துக்கொண்டிருந்த ஜெயக்குமாரை சந்தித்தோம். தன் தந்தை குணசேகரனை நமக்கு அறிமுகப்படுத்தியவர், ‘‘என்னை மாதிரியே எங்க அப்பாவும் இயற்கை விவசாயத்துல ஆர்வமா இருக்காங்க. அப்பா கடுமையான உழைப்பாளி. இவங்கதான் வயல்ல நின்னு முழுமையா விவசாயத்தை கவனிச்சிக்குறாங்க. விவசாயத்துல நல்ல அனுபவம் இருந்தாலும், இயற்கை விவசாயத்துக்கு மாறுன பிறகு, நான் சொல்ற இயற்கை விவசாய தொழில்நுட்பங்களை முறையா கடைப்பிடிக்குறாங்க. இது எனக்கு கிடைச்ச மிகப்பெரிய பாக்கியம்’’ என நெகிழ்ச்சியோடு பேசியவர் தன்னைப் பற்றிய தகவல்களைப் பகிர்ந்துக் கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்