தண்டோரா

பசுமைக் குழு, படங்கள்: என்.ஜி.மணிகண்டன், வீ.சிவக்குமார், தே.தீட்ஷித்

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களை தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும். 

- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்

மீன் வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடி, வேளாண் அறிவியல் மையத்தில் செப்டம்பர் 21-ம் தேதி, ‘மீன் வளர்ப்பு’, 22-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு முறைகள்’ 23-ம் தேதி, ‘நெல்லியில் மதிப்புக்கூட்டுதல்’, 28-ம் தேதி, ‘மண்வள மேலாண்மை முறைகள்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04577 264288

பூச்சிவிரட்டி தயாரித்தல்!

நாமக்கல் மாவட்டம், வேளாண் அறிவியல் மையத்தில், செப்டம்பர் 16-ம் தேதி, ‘மீன் மற்றும் இறாலுக்கான தீவன மேலாண்மை’ 26-ம் தேதி, ‘பூச்சி விரட்டி தயாரித்தல்’, 27-ம் தேதி, ‘நெல் மற்றும் சிறுதானிய பயிர்கள் சாகுபடி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04286 266345.

வெள்ளாடு வளர்ப்பு!

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில், செப்டம்பர் 17-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’, 20-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’, 22-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’, 27-ம் தேதி, ‘கறவை மாட்டுப்பண்ணை’, 29-ம் தேதி, ‘மாடித்தோட்டம் அமைத்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

செல்போன்: 77088 20505, 94885 75716.

தேனீ வளர்ப்பு!

ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில், செப்டம்பர் 20-ம் தேதி, ‘தேனீ வளர்ப்பு’, 27-ம் தேதி, ‘காளான் உற்பத்தித் தொழில்நுட்பம்’ 28-ம் தேதி, ‘இயற்கை விவசாயப் பயிற்சி’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04285 241626.

கறவை மாடு வளர்ப்பு!

மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம், கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், செப்டம்பர் 14-ம் தேதி, ‘நாட்டுக்கோழி வளர்ப்பு’ 22-ம் தேதி, ‘கறவை மாடு வளர்ப்பு’, 27-ம் தேதி, ‘வெள்ளாடு வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 0452 2483903.

கட்டணப்பயிற்சிகள்

மாடித்தோட்டம்!

கன்னியாகுமரி மாவட்டம், விவேகானந்த கேந்திரம், இயற்கை வள அபிவிருத்தித் திட்டத்தில், செப்டம்பர் 24-ம் தேதி, ‘மாடித்தோட்டப் பயிற்சி’ நடைபெற உள்ளது. பயிற்சிக் கட்டணம் ரூ.100. முன்பதிவு அவசியம்.

தொலைபேசி: 04652 - 246296.

இயற்கை விவசாயக் கருத்தரங்கு!

காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் தாலுக்கா, படாளம் கற்பக விநாயகா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில், மத்திய உயிரித் தொழில்நுட்பத் துறையின் ஆதரவுடன் செப்டம்பர் 14 மற்றும் 15-ம் தேதிகளில், ’இயற்கை விவசாயக் கருத்தரங்கு மற்றும் பயிற்சிப் பட்டறை’ நடைபெற உள்ளன. இதில் மண்புழு விஞ்ஞானி முனைவர் சுல்தான் அகமது இஸ்மாயில், முன்னோடி விவசாயி ‘அரியனூர்’ ஜெயச்சந்திரன், இந்தோ-சுவீடன் திடக்கழிவு மேலாண்மை பயிற்சியாளர் கேசவன் மற்றும் விஞ்ஞானிகள் மானசா, பார்வதி, கார்மேகம்... உள்ளிட்டவர்கள் கருத்துரை வழங்க உள்ளனர். மண்புழு உரம், பஞ்சகவ்யா தயாரிப்பு... போன்றவை குறித்த நேரடிய செயல்விளக்கமும் உண்டு. மதிய உணவு மற்றும் காலை, மாலை தேநீர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. செங்கல்பட்டு மற்றும் மதுராந்தகம் நகரிலிருந்து பேருந்துப் போக்குவரத்து வசதியும் உண்டு. மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு ரூ.200 மட்டும் நுழைவுக் கட்டணம். விவசாயிகளுக்கு அனுமதி இலவசம். முன்பதிவு முக்கியம்.

செல்போன்: 98652 24289, 98846 86147.


அறிவிப்பு

தண்டோரா பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் விவசாயிகள், நிகழ்ச்சிகள் குறித்த நிறைகுறைகளை உடனுக்குடன் தெரிவிக்க 044 66802927 என்ற எண்ணில் தொடர்புகொள்ளுங்கள். அங்கே கணினிக் குரல் வழிகாட்டும். அதற்கேற்ப 3 நிமிடங்களுக்குள், உங்கள் கருத்தைப் பதிவுசெய்யுங்கள். எதிர்முனையில் உங்களுடன் உரையாட யாரும் இருக்க மாட்டார்கள். எனவே, அந்த 3 நிமிடங்கள் முழுக்க முழுக்க உங்களுக்கே! அவசியமென்றால், நாங்களே உங்களைத் தொடர்புகொண்டு, மேலும் விவரங்களைப் பெற்றுக்கொள்வோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick