ஒரு கிலோ தக்காளி ரூ100

-என உச்சத்தில் விற்பனையாவதும் உண்டு. இதே தக்காளி கிலோ 1 ரூபாய்க்கும் சரிந்து சாலையில் கொட்டுவதும் நடக்கிறது.

விவசாயிகளைப் பொறுத்தவரை நிரந்தரப் பிரச்னையாக இருப்பது விளைபொருட்களுக்கு, உரிய விலை கிடைக்காததுதான். இதில் முக்கிய காரணமாக இருப்பது ஒரே சமயத்தில், ஒரே பயிரை அதிகமாக விளைவிப்பதுதான். ஒவ்வொரு பகுதியிலும், அந்தந்தப் பட்டத்துக்கு என்ன பயிர் சிறப்பாக விளையுமோ, அந்தப் பயிரை மட்டும் சாகுபடி செய்தால் விலை வீழ்ச்சியில் இருந்து ஓரளவு தப்பிக்கலாம். 

மேலும், விளைபொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காத காலங்களில், சாலையோரங்களில் வீசிச் செல்லும் அவல நிலையில்தான் விவசாயிகள் இன்னமும் இருக்கிறார்கள். ஒவ்வொரு விளைபொருளையும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் தொழில்நுட்பங்கள் தெரியாததால், பல கோடி ரூபாய் மதிப்புள்ள விளைபொருட்கள் வீணாகின்றன. விளைபொருட்களை நேரடியாக விற்பனை செய்தால், விவசாயிகளுக்கும் நன்மை, நகரத்தில் உள்ள நுகர்வோர்களுக்கும் நன்மை. ஆனால், நேரடி விற்பனை செய்வது குறித்த விவரம் பல விவசாயிகளுக்குத் தெரிவதில்லை.

வேளாண்மைத் துறை அலுவலர்களின் முறையான ஆலோசனைகள் கிடைக்காமல், தனியார் நிறுவனங்களை நம்பி, விதை, உரம், பூச்சிக்கொல்லி எனச் சாகுபடி செலவுக்கே பெரும் பணம் செலவழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். அரசின் மானியங்களும், திட்டங்களும் வசதி படைத்த, விவரம் தெரிந்த ஓரிரு விவசாயிகளை மட்டுமே சென்றடைகின்றன. பெரும்பாலான விவசாயிகளுக்கு எந்தச் சலுகைகயும் கிடைப்பதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்