மழைக்காலம்... கால்நடைகள் கவனம்!

கு.ராமகிருஷ்ணன், படங்கள்: வீ.சிவக்குமார், கா.முரளி, ம.அரவிந்த்

ண்டு முழுவதும் நமக்காக உழைத்து வருமானம் ஈட்டித்தரும் கால்நடைகளை கோடை வெயில் மற்றும் மழைக்காலங்களில் பாதுகாக்க வேண்டியது, நமது கடமை அல்லவா... தற்போது பருவமழைக்காலம் என்பதால் கால்நடைப் பாதுகாப்புக்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சில விஷயங்களைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகிறது. இதுகுறித்து தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் டாக்டர் புண்ணியமூர்த்தி சொன்ன விஷயங்கள் இங்கே...

“மழைக்காலம் ஆரம்பிக்கும்போதும், குளிர் மற்றும் பனிக்காலம் முடிந்து கோடை காலம் ஆரம்பிக்கும்போதும்... கால்நடைகளின் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து, நோய் கிளர்ச்சிகள் ஏற்பட வாய்ப்புண்டு. அந்தச் சமயங்களில் ஆடு, மாடு, கோழிகள் வளர்க்கும் விவசாயிகள் அனைவரும் தங்களது பகுதியில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகி, அவர்கள் பரிந்துரைக்கும் கோமாரி, துள்ளுமாரி, சப்பை, ஜன்னி மற்றும் கோழிகளுக்கு ஏற்படக்கூடிய கழிச்சல் ஆகிய நோய்களுக்கான தடுப்பூசிகளைப் போட வேண்டும். தங்கள் பகுதியில் உள்ள தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தைத் தொடர்பு கொண்டும் நோய்த் தடுப்பு ஆலோசனைகளைப் பெறலாம். இவை ஒருபுறமிருக்க, முன்னெச்சரிக்கைத் தடுப்பு மருந்துகளாக... அன்றாடம் மிக எளிமையாக கிடைக்கக்கூடிய மூலிகைகளையேக் கூடப் பயன்படுத்த முடியும்” என்ற புண்ணியமூர்த்தி, சில மருத்துவ முறைகளைச் சொன்னார். 

“மழைக்காலங்களில், 15 நாட்களுக்கு ஒரு முறை... ஒரு ஆட்டுக்கு 100 கிராம், மாட்டுக்கு 250 கிராம், கன்றுக்கு 150 கிராம் என்ற அளவில் வாய் வழியாக சோற்றுக்கற்றாழையைக் கொடுத்து வர வேண்டும். மழைக்காலம் முடியும் வரை இப்படிக் கொடுப்பதால் கால்நடைகளின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். மழைக்காலம் முடிந்தாலும் கூட இதைத் தொடரலாம்.

கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் நோய் வராமல் தடுக்க... வாரம் ஒருமுறை அரிசிக்குருணையில் 50 கிராம் கீழாநெல்லி, 5 கிராம் சீரகம் ஆகியவற்றைக் கலந்து கொடுக்கலாம். இது 10 கோழிகளுக்கான அளவு.

மழைக்காலங்களில் ஆடு மாடுகளின் கால் குளம்புகளில் புண்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அப்படி புண்கள் ஏற்பட்டால், ஒரு கைப்பிடி துளசி, ஒரு கைப்பிடி குப்பைமேனி, 4 பல் பூண்டு, 5 கிராம் மஞ்சள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து அரைத்து... 100 மில்லி நல்லெண்ணெயில் வதக்கி, சூடு ஆறியதும் ஆடு மாடுகளின் குளம்பில் தடவ வேண்டும். உப்பு மற்றும் மஞ்சள் கலந்த நீரில் குளம்புகளைக் கழுவி, ஈரத்தைத் துடைத்த பிறகு, இம்மருந்தைத் தடவ வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்