பி.டி பருத்தி விண்ணப்பம்... மான்சான்டோ நடத்தும் நாடகம்...

துரை.நாகராஜன்

ரபணு மாற்றப்பட்ட பருத்தி விதைகளை, இந்தியாவில் உருவாக்குவதற்கு அனுமதி கோரும் விண்ணப்பத்தை அமெரிக்க நிறுவனமான மான்சான்டோ திரும்பப் பெற்றுள்ளது. இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “எங்களின் போல்கார்ட் II ரவுண்ட் அப் ரெடி பிளெக்ஸ் டெக்னாலஜியை உள்ளூர் விதை நிறுவனங்களோடு பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று இந்திய அரசு கட்டாயப்படுத்துகிறது. எங்களைக் கட்டாயப்படுத்தும் இந்திய அரசின் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இந்த விண்ணப்பத்தைத் திரும்பப் பெற்றிருக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து  தமிழ்நாடு இயற்கை விவசாயிகள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ‘அரச்சலூர்’ செல்வத்திடம் பேசினோம். “மான்சான்டோவின் அட்டூழியங்களுக்கு இந்திய அரசே துணை போகிறது. இந்தியாவில் மரபணு மாற்றம் செய்யப்பட்ட பருத்தியை அனுமதித்ததிலேயே அரசின் நிலைப்பாட்டை அறிந்து கொள்ளலாம். பி.டி பருத்தி, விவசாயிகள் மத்தியில் ஏற்படுத்திய தாக்கங்கள் மிகவும் கொடுமையானவை. பி.டி விதைகள் அனுமதிக்கப்பட்டால், விதை மறுசுழற்சி முறை ஒழிக்கப்பட்டு... ஒவ்வொரு முறையும் விதைக்காக மான்சான்டோவிடம் விவசாயிகள் கையேந்த வேண்டிய நிலை ஏற்படும். ஒரு கட்டத்தில், விதையின் விலையை ஏகபோகமாகத் தனியார் நிறுவனம் நிர்ணயிக்கும் சூழ்நிலை உருவாகும்.

தற்போது, மான்சான்டோ நிறுவனம், பருத்தி விதைகளை உருவாக்க அனுமதி கோரும் விண்ணப்பத்தைத் திரும்ப வாங்கியதில் மகிழ்ச்சிதான். ஆனால் மான்சான்டோ இந்தியாவில் இருந்து முழுவதுமாக வெளியேறினால்தான் முழுமையான மகிழ்ச்சி கிடைக்கும். மான்சான்டோவுக்குக் கொடுக்கப்பட்ட அனைத்து உரிமங்களையும் மத்திய அரசு பறிக்க வேண்டும். இப்போது ஏற்பட்டிருக்கும் நிலை தற்காலிகமானதுதான். நிரந்தரமானதல்ல. மரபணு மாற்றுப்பயிர்களை விற்பனை செய்ய இந்தியாவை ஒரு வேட்டைக்காடாகப் பார்க்கிறது, மான்சான்டோ.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்