விருது வாங்கிக் கொடுத்த நெல் சாகுபடி!

துரை.நாகராஜன், படங்கள்: தே.அசோக்குமார்

ந்த ஆண்டு சுதந்திர தின விழாக் கொண்டாட்டத்தில், ‘காஞ்சிபுரம் மாவட்டத்தின் சிறந்த விவசாயி’ என்ற விருதைப் பெற்றிருக்கிறார், காஞ்சிபுரம் மாவட்டம், கோவிந்தவாடி கிராமத்தைச் சேர்ந்த நெல் விவசாயி பழனி. சிறு வயதிலிருந்தே நெல் சாகுபடியில் ஈடுபட்டு வரும் பழனி, விவசாயத்துக்காகப் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். நெல் வயலில் களை பறிப்பு வேலையைக் கவனித்துக்கொண்டிருந்த பழனியைச் சந்தித்து ‘பசுமை விகடன்’ சார்பாக வாழ்த்துகளைச் சொன்னதும் நம்மிடம் உற்சாகமாகப் பேச ஆரம்பித்தார்.

“எனக்குச் சின்ன வயசுல இருந்தே விவசாயத்துல ஆர்வம் அதிகம். அப்பா வயலுக்குப் போறப்போ அவருக்கு உதவியா நானும் வேலைகளைச் செய்வேன். அதனால படிப்புல நாட்டமில்லாமப் போயிடுச்சு. ‘தாத்தா காலத்துல ரசாயன உரம் போடாமத்தான் விவசாயம் செஞ்சாங்க. ஆனா, என்னை ரசாயனத்தைப் பயன்படுத்தி விவசாயம் செய்ய வச்சுட்டாங்க’னு அப்பா அடிக்கடி சொல்வார். நான், ரசாயன உரம் இல்லாம இயற்கை விவசாயம் பண்ணணும்னு நினைச்சு ஒருமுறை 80 சென்ட்ல நெல் போட்டேன். ஆனா, ஒரு கட்டத்துல மனம் மாறி யூரியா 5 படி போட்டுட்டேன்” என்று, இயற்கை விவசாயம் பற்றி சொன்னவர் தொடர்ந்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்