வடகிழக்குப் பருவ மழை... மரங்களுக்கு வட்டப்பாத்தி, கவாத்து அவசியம்!

ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

ந்த ஆண்டு, வடகிழக்குப் பருவமழைப் பொழிவு சிறப்பாக இருக்கும் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படும் சூழ்நிலையில்... மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் கடைப்பிடிக்க வேண்டிய பராமரிப்பு முறைகள் குறித்து, துறை சார்ந்த வல்லுநர்கள் சொன்ன விஷயங்கள் இங்கே இடம்பிடிக்கின்றன.

மரக்கன்றுகளை நடவு செய்துள்ள விவசாயிகள் மேற்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்துப் பேசிய ஓய்வுபெற்ற உதவி வனபாதுகாவலர் ஆர்.ராஜசேகரன், “நாட்டில் 33 சதவிகித அளவில்  இருந்த வனப்பரப்பு 22 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. அதனால், வனப்பரப்பை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், சமூகக் காடுகளை உருவாக்கி வருகிறோம். கிட்டத்தட்ட 45 கோடி அளவில் மரங்களைப் பெருக்கினால்தான் 33 சதவிகித இலக்கை அடைய முடியும். தற்போது மர வளர்ப்பு குறித்த விழிப்பு உணர்வு அதிகரித்து வரும் சூழ்நிலையில், மரம் நடுதல் அதிகரித்து வருவது ஆரோக்கியமான மாற்றம்.

மரப்பயிர் சாகுபடியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், வடகிழக்குப் பருவ மழைக்கு முன் சில பாராமரிப்பு பணிகளைச் செய்ய வேண்டும். நடவு செய்துள்ள மரங்களைச் சுற்றி 1 மீட்டர் விட்டத்தில் 15 சென்டி மீட்டர் ஆழத்தில் வட்டப்பாத்தி போல அமைக்க வேண்டும். ஒவ்வொரு மரத்தின் அடிப்பகுதியிலும் 10 கிலோ அளவு இயற்கை இடுபொருளை இட வேண்டும். ஆட்டு எரு, மண்புழு உரம், தொழுஉரம் போன்றவற்றைத் தனித்தனியாகவோ அல்லது சரிவிகிதத்தில் கலந்தோ கொடுக்கலாம். மரங்களின் வயது அதிகமாக இருப்பின் இடுபொருட்களின் அளவையும் அதிகரித்துக்கொள்ளலாம். கோழி எரு எனில் நன்கு காய்ந்த பிறகுதான் கொடுக்க வேண்டும். பச்சையாகக் கொடுத்தால் அதன் கார, அமிலத் தன்மை பயிருக்குப் பாதிப்பை ஏற்படுத்தும்.

அதேபோல, மழைக்காலத்துக்கு ஒரு மாதத்துக்கு முன்பே, மரங்களில் உள்ள பக்கக் கிளைகளை கவாத்துச் செய்ய வேண்டும். கவாத்துச் செய்யும்போது, மரங்களில் காயம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். காயங்கள் ஏற்பட்டால் நோய்த்தாக்குதல் ஏற்படும். மரப்பயிர் சாகுபடி செய்துள்ள நிலத்தில் எக்காரணம் கொண்டும் தண்ணீர் தேங்கி நிற்க விடக்கூடாது. மழைத்தண்ணீர் வடிந்து போகுமாறு வடிகால் வசதி அமைத்துக்கொள்ள வேண்டும். இப்படி வடியும் தண்ணீரை... பண்ணைக்குட்டை அமைத்து அதில் சேமித்து வைத்தால் வறட்சிக் காலங்களில் உதவும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்