“கோவணத்துல மானமிருக்கு... வேட்டியில மானமில்ல!”

கோடீஸ்வர அமைச்சர் கருப்பண்ணனுக்கு சுளீர் ஜூனியர் கோவணாண்டி, ஓவியம்: ஹரன்

‘அம்மா’வை கண்ணு முன்னால பார்த்தாலும் சரி, அவங்க ஹெலிகாப்டர்ல பறந்துகிட்டிருந்தாலும் சரி,  சட்டுபுட்டுனு கால்ல விழறீங்க. இல்ல, மேடை கிடைச்சா போதும் கண்டதையும் வாந்தி எடுக்கிறீங்க. இது ரெண்டை மட்டும்தான் இந்த அ.தி.மு.க. மந்திங்க, மன்னிச்சுக்கோங்க மந்திரிங்க சரியா செய்துகிட்டு இருக்கீங்க.

இப்படித்தான் முதல் நாள் ராத்திரி எங்க, என்னத்தை தின்னு தொலைச்சாரோ... நம்ம தங்கத் தமிழ்நாட்டு சுற்றுச்சூழல் மந்திரி, கே.சி. கருப்பண்ணன்... மேடை கிடைச்சதும் வாந்தி எடுத்திருக்காரு. இந்த ஆளைச் சொல்லிக் குத்தமில்ல... இவரெல்லாம் ஒரு ஜென்மம்னு சொல்லி ஓட்டுப்போட்டு தேர்ந்தெடுத்த நம்மளத்தான் சொல்லிக்கணும்.

ஏதோ ஒரு குடிகாரன் உளறினானா... விட்டுத் தொலைச்சுரலாம். ஆனா, அரசாங்க பணத்துல... ஏசி காருல தேசியக்கொடியை பறக்கவிட்டுக்கிட்டு, ஓசியில சர்புர்ருனு வலம் வர்ற ஒரு மந்திரி; தமிழ்நாட்டுல இருக்கிற ஏழெட்டு கோடி பேருக்குமான பிரதிநிதியா இருக்க வேண்டிய ஒருத்தரு; இது எல்லாத்தையும் மறந்துட்டு, ஏதோ பக்கத்து வயல்காரன்கிட்ட வரப்புத் தகராறு வந்தா தாறுமாறா பேசுற மாதிரி, விவசாயிங்கள நோக்கி வார்த்தைகளை அள்ளிக் கொட்டியிருக்காரு, அதுவும் அரசாங்க மேடையில ஏறி நின்னுக்கிட்டு!

ரெண்டு, மூணு நாளைக்கு முன்ன, ஈரோட்டுல கூட்டுறவுக் கடன் மேளா துவக்கவிழா மேடையில ஏறின இந்த மந்திரி கருப்பண்ணன், ‘‘இன்னிக்கு கோடிக்கணக்குல விவசாயிங்ககிட்ட பணமிருக்கு. கூட்டுறவு பேங்க்ல கோடிக் கணக்குல பணம் போட்டிருக்காங்க. வட்டி வாங்கறாங்க, ஃபைனான்ஸ் பண்றாங்க, லாரி வெச்சுருக்காங்க. இதையெல்லாம் விட்டுட்டு கோவணத்தைக் கட்டிக்கிட்டு ரோட்டுல படுத்துக்கிட்டு தண்ணியில்ல... தண்ணிவிட மாட்டேங்கறீங்கனு போராட்டம் நடத்துறாங்க. ஒரு சென்ட் நிலம் இல்லாதவனெல்லாம் விவசாயினு சொல்லிக்கிட்டு போராடுறான்’’னு உளறிக் கொட்டியிருக்காரு.

அட மண்டூக மந்திரியே... விவசாயிங்க கோடீஸ்வரன்களா இருக்கக்கூடாதுனு உங்களுக்கு யாரு சொன்னா? அப்படி தமிழ்நாட்டுல சட்டம் ஏதும் போட்டு வெச்சுருக்கீங்களா?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்