மரபணு மாற்றுக் கடுகு... பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம்!

நிகரன்

டெல்லிப் பல்கலைக்கழகம், மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விதையை உற்பத்தி செய்து, அதற்கு ‘டி.எம்.எச் - 11’ எனப் பெயர் சூட்டியுள்ளது. இந்தக் கடுகை வர்த்தக ரீதியாகச் சாகுபடி செய்ய மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள ‘மரபணு மாற்றுப் பயிர்களுக்கான அனுமதியளிக்கும் குழு’ ஒப்புதல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, அனுமதியளிக்கும் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒவ்வொரு முறையும் மரபணு மாற்று விதைகள் கொண்டு வரும்போது அரசியல் ரீதியாகவும் விவசாயிகள் மத்தியிலும் சர்ச்சை எழும். இந்த மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு விலங்குகளுக்கும், மனிதர்களுக்கும் மிகவும் ஏற்றது. விஞ்ஞானிகள் ‘நாட்டின் சமையல் எண்ணெய் தேவை உள்நாட்டு உற்பத்தியைவிட அதிகமாக இருப்பதால், எண்ணெய் உற்பத்தியை அதிகரிக்க மரபணு மாற்று தொழில்நுட்பங்கள் தேவைப்படுவதாகச் சொல்கிறார்கள்’ என்று சொல்லப்பட்டிருக்கிறது.

இதைத் தொடர்ந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம்... செப்டம்பர் 5-ம் தேதியன்று, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகு குறித்த அறிக்கையை இணையதளத்தில் பதிவேற்றியுள்ளது. இ்ந்த இணையத் தளத்தில் அக்டோபர் 5-ம் தேதி வரை, பொதுமக்கள் தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம். மரபணு பொறியியல் மதிப்பீட்டுக் குழு, பொதுமக்களின் கருத்துகளைத் தொடர்ந்து கண்காணித்து, மரபணு மாற்றம் செய்யப்பட்ட கடுகுக்கு அனுமதி அளிப்பது குறித்துப் பரிசீலனை செய்யும்.

ஏற்கனவே, உற்பத்தி அதிகரிப்புக்காக, கொண்டு வரப்பட்ட மரபணு மாற்றப்பட்ட பருத்தி ரகத்தால் பாதிக்கப்பட்டு, இந்தியாவில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் தற்கொலை செய்து மாண்டுபோயிருக்கிறார்கள். இந்நிலையில் மரபணு மாற்றம் செய்யப்பட்டக் கடுகுக்கான அனுமதி, விவசாயிகள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்