அன்போடு அழைக்கிறோம்!

அனைவருக்கும் பசுமை வணக்கம்!

மஞ்சள் மாநகர் ஈரோட்டில், கன்னி முயற்சியாக ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2015’, என்ற கண்காட்சி மற்றும் கருத்தரங்கு, விவசாயிகளான உங்களின் ஆதரவுடன் கடந்த ஆண்டு வெற்றிகரமாக நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாமல், நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டு பயன்பெற்றனர். இதைத் தொடர்ந்து, மலைக்கோட்டை மாநகரமான திருச்சியில் கடந்த பிப்ரவரி மாதம் ‘அக்ரி எக்ஸ்போ’ வேளாண் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது.

இந்த வரிசையில், ‘பசுமை விகடன் அக்ரி எக்ஸ்போ-2016’ கண்காட்சி மற்றும் கருத்தரங்கு மஞ்சள் மாநகர் ஈரோட்டில், மீண்டும் இந்த செப்டம்பர் 9 முதல் 12 வரை நடைபெற உள்ளது. விவசாயம் சார்ந்த பல்வேறு அரங்குகள், இயற்கை இடுபொருட்கள் தயாரிப்போர், முன்னோடி விவசாயிகள், விஞ்ஞானிகள், அரசுத்துறை பிரதிநிதிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கேற்று தங்களின் அனுபவங்களை உங்கள் முன் அள்ளி வைக்க உள்ளனர். பல இடங்களில் தேடி அலைந்து தெரிந்துகொள்ள வேண்டிய விவசாயம் சம்பந்தமான தகவல்கள், இக்கண்காட்சியின் மூலம் ஒரே குடையின்கீழ் கிடைக்க உள்ளன.

இயற்கை வேளாண்மை ஆர்வலர், பட்டிமன்ற நடுவர், பேச்சாளர், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன், கண்காட்சி மற்றும் கருத்தரங்கை தொடங்கி வைத்து சிறப்புரையாற்ற உள்ளார். கோயில்களிலும், சடங்குகளில் மட்டுமே பயன்படுத்திய பஞ்சகவ்யாவை, பயிர்களின் வளர்ச்சிக்கும் பலன் தரும் வகையில் மடைமாற்றிய ‘பஞ்சகவ்யா சித்தர்’ டாக்டர்.கே.நடராஜன் மற்றும் விவசாயிகள் சங்கத் தலைவர் காசியண்ணன் ஆகியோரும் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்கிறார்கள்.

உங்களுக்காகவே எங்களால் முன்னெடுக்கப்படும் வேளாண் கண்காட்சி மற்றும் கருத்தரங்கு ஆகிய நிகழ்வுகளில் திரளாக பங்கேற்று, பயன்பெற அன்போடு அழைக்கிறோம்.

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்