ஊருணிகளைத் தூர்வாரும் பாரத் பெட்ரோலியம்..!

மக்கள் பங்களிப்புடன் ஒரு பசுமை முயற்சி!இ.கார்த்திகேயன், படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

திக மாசுக்களை வெளியிடும் தொழிற்சாலைகள், இயற்கை வளங்களை எடுக்கும் தொழிற்சாலைகள் போன்றவை அதற்கு நிகராகச் சுற்றுச்சூழலை மேம்படுத்தும் பணிகள், சமூகப் பங்களிப்புப் பணிகளில் ஈடுபட வேண்டும் என்பது விதி. ஆனால் பல தொழிற்சாலைகள், நிறுவனங்கள் இவ்விதியைக் காற்றில் பறக்க விட்டுவிடுகின்றன. ஆனால், சமூக அக்கறையுடன் சூழல் சார்ந்த பணிகளில் ஈடுபடும் நிறுவனங்களும் உண்டு. அப்படிப்பட்ட நிறுவனங்களில் ஒன்றுதான், ‘பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன்’. இந்நிறுவனம், ‘தானம் அறக்கட்டளை’யுடன் இணைந்து மக்கள் பங்களிப்போடு நீர்நிலைகளைத் தூர்வாரும் மகத்தான பணியில் ஈடுபட்டு வருகிறது.

இப்பணிகள் குறித்து, தானம் அறக்கட்டளை தன்னார்வ அமைப்பின் திட்ட அலுவலர், சதீஸ் பாண்டியனிடம் பேசினோம். “மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் 2003-ம் ஆண்டில் இந்த அறக்கட்டளை தொடங்கப்பட்டது. தூத்துக்குடி மாவட்டத்தில் புதூர், விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், கருங்குளம், கயத்தாறு ஆகிய ஐந்து யூனியன்களில் விவசாயிகள் குழுக்களை உருவாக்கி ‘வயலகம்’ என்ற அமைப்பை உருவாக்கியிருக்கிறோம். அதன் மூலம், விவசாயத்தில் நீர் மேலாண்மை, ஊருணிகளை ஆழப்படுத்துதல், விவசாயக் கருவிகளை வாங்கிக் கொடுத்தல், வேலிக்கருவையை அகற்றுதல் போன்ற பணிகளைச் செய்து வருகிறோம். மும்பையில் உள்ள பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், சமுதாயப் பங்களிப்புத் திட்டத்தின் கீழ் மக்களின் பங்களிப்புடன் ஊருணிகளைத் தூர்வாரிக் கொடுத்து வருகிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்