தண்டோரா

அறிவிப்பு - பசுமைக் குழு

‘தண்டோரா’ பகுதியில் இடம்பெறும் நிகழ்ச்சிகளில் கடைசி நேர மாறுதல்கள் ஏற்படலாம். எனவே, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், அமைப்புகள் ஆகியவற்றிடம் நிகழ்ச்சி குறித்த தகவல்களைத் தொலைபேசி அல்லது செல்போன் வாயிலாக, முன்கூட்டியே உறுதிசெய்த பின், பயண ஏற்பாடுகளைச் செய்யவும்.
 
- ஆசிரியர்

இலவசப் பயிற்சிகள்


மாடித்தோட்டம்

சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி, பஞ்சாப் நேஷனல் வங்கியின் உழவர் பயிற்சி மையத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ‘இயற்கை விவசாயம்’, 20-ம் தேதி ‘கோடைக்கால கால்நடை பராமரிப்பு’, 25-ம் தேதி ‘மூலிகை மருத்துவம்’, 27-ம் தேதி ‘மாடித்தோட்டம்’, 28-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

தொடர்புக்கு, செல்போன்: 77088 20505, 94885 75716.

காளான் வளர்ப்பு

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிப்பாளையம், மைராடா வேளாண் அறிவியல் நிலையத்தில் ஏப்ரல் 18-ம் தேதி ‘தேனீ வளர்ப்பு தொழில்நுட்பம்’, 19-ம் தேதி ‘உயிர் உரங்கள் உற்பத்தி தொழில்நுட்பம்’, 28-ம் தேதி ‘சிப்பிக் காளான், பால் காளான் வளர்ப்பு மற்றும் அறுவடை பின்சார் தொழில்நுட்பம்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 04285 241626.

மண்புழு உரம் தயாரித்தல்

காஞ்சிபுரம் மாவட்டம், காட்டுப்பாக்கம் வேளாண் அறிவியல் மையத்தில் ஏப்ரல் 18, 19-ம் தேதிகளில் ‘மண்புழு உரம் தயாரித்தல்’ 20, 21-ம் தேதிகளில் ‘உவர்நீர் மீன் வளர்ப்பு’ 24-28-ம் தேதி வரை ‘மென்பொம்மைகள் மற்றும் பூங்கொத்து தயாரித்தல்’ ஆகிய பயிற்சிகள் நடைபெற உள்ளன.

முன்பதிவு அவசியம்.

தொடர்புக்கு, தொலைபேசி: 044 27452371.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick