விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 10

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
விதை உரிமையைப் பறிக்கும் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள்!சந்தைஅனந்து - தொகுப்பு: க.சரவணன்

வெகுஜன சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

வளர்ந்த நாடுகளுக்கும் பன்னாட்டு நிறுவனங்களுக்கும் சாதகமாகப் போடப்படும் ‘தடையற்ற வர்த்தக ஒப்பந்த’ங்களை (Free Trade Agreements) எதிர்த்து உலகம் முழுவதும் போராட்டங்கள் நடந்தவாறேதான் உள்ளன. அப்படி நடந்த முக்கியமான போராட்டங்களில் ஒன்றுதான் 2013-ம் ஆண்டில் தென் அமெரிக்காவின் கொலம்பியா நாட்டில் நடந்த விவசாயிகள் போராட்டம்.

அந்நாட்டின் 60 சதவிகிதத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் ஒன்று திரண்டு, தலைநகரமான பொகொட்டா (Bogota)வையும் இன்னும் பல முக்கியமான நகரங்களையும் முற்றுகையிட்டனர். விவசாயிகள் வேலை நிறுத்தத்தை அறிவித்து நகர வாசிகளுக்கு உணவு உற்பத்தி செய்வதை நிறுத்தினர். பாலைத் தெருக்களிலும் வயல்களிலும் கொட்டினர். அந்த நாட்டின் சிறு, குறு விவசாயிகளை ஒட்டுமொத்தமாகப் பன்னாட்டு நிறுவனங்களின் நலனுக்காகக் காவு கொடுக்கும் வகையில், அந்நாட்டு அரசு எடுத்த சில முடிவுகள்தான் அந்தப்புரட்சிக்குக் காரணமாக இருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick