நீங்கள் கேட்டவை: இடுபொருள் கடை வைக்க பட்டயப்படிப்பு படிக்க வேண்டுமா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறா பாண்டி - படங்கள்: வீ.சிவக்குமார்

‘‘நாங்கள் 10 ஆண்டுகளுக்குமுன் நடவு செய்த மாந்தோட்டத்தை விலைக்கு வாங்கியுள்ளோம். இந்த மா ரகங்களுக்குத் தற்போது சந்தையில் விலை குறைவாகக் கிடைக்கிறது. இந்த மரங்களை வெட்டிவிட்டுப் புதிய மாங்கன்றுகளை நடவு செய்ய வேண்டுமா அல்லது மாற்று வழி ஏதேனும் உள்ளதா?’’

கே.ரூபா, கும்மிடிப்பூண்டி.

மா மரங்களுக்கு ஒட்டுக்கட்டும் தொழில்நுட்பத்தில் அனுபவம் வாய்ந்த நாகப்பட்டினம் மாவட்டம், வேளாங்கன்னியைச் சேர்ந்த லோகநாதன் பதில் சொல்கிறார்.

‘‘முதலில் மாற்று வழி உள்ளதா? என்று கேட்டதற்கு வாழ்த்துகள். சிலர் தோட்டத்திலுள்ள மா மரங்களை வெட்டித்தள்ளிவிட்டுத்தான் ஆலோசனை கேட்பார்கள். மரங்கள் நடவு செய்யும்போது, எந்த ரகம் நல்ல லாபம் தரும் என்று யோசிக்காமல் நடவு செய்துவிடுகிறார்கள். அவை ஐந்தாண்டு காலம் வளர்ந்த பிறகுதான் இந்த ரகத்தைக் காட்டிலும்  இன்னொரு ரகத்தை வைக்கலாம் என்று அவர்களின் மனம் அலை பாயும். உடனே, மரங்களை வெட்டிவிட்டுப் புதிய கன்றுகளை நடவு செய்துவிடுகிறார்கள். இதனால், பணமும் காலமும்தான் விரயம். இதைத் தவிர்த்து மாற்றுமுறையில் யோசித்தும் செயல்படலாம். ஏற்கெனவே, வளர்ந்துள்ள நீலம், பெங்களூரா... மரங்களை வெட்டி அகற்றாமல் அல்போன்சா, பங்கனப்பள்ளி... போன்ற எந்த ரகத்தை வேண்டுமானாலும் அவற்றில் ஒட்டுக்கட்டிக் கொள்ளலாம்.

மழை பெய்யும் மாதங்களான ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை ஆகிய மாதங்கள் ஒட்டுக்கட்டுவதற்கு ஏற்றவை. மரத்தை முழுவதும் மொட்டையடிக்காமல், அதிலுள்ள சில கிளைகளை மட்டும் வெட்டி ஒட்டுக் கட்டலாம். நர்சரி நடத்துபவர்களிடம் ஒட்டுக் கட்டும் தொழில்நுட்பம் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். இதன்மூலம், புதிய மரங்களை நடவு செய்வதற்கான செலவும் குறையும். அடுத்த மூன்று ஆண்டுகளில் ஒட்டுக்கட்டிய மா மரங்கள் காய்க்கத் தொடங்கிவிடும்.’’

தொடர்புக்கு, செல்போன்: 99652 42196.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick