மண்புழு மன்னாரு: கடலைத் திருவிழா கற்றுத் தந்த பாடம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
மாத்தி யோசிஓவியம்: ஹரன்

வ்வொரு பயணமும் விலைமதிப்பில்லாத விஷயங்களைக் கற்றுக்கொடுக்குது. ஒருமுறை கர்நாடக மாநிலம், பெங்களூருக்கு பன்னாட்டுப் பயிலரங்குக்குப் போயிருந்தபோது, சாயங்கால நேரத்தை உபயோகமாகக் கழிக்க, கர்நாடக நண்பர்கிட்ட ஆலோசனை கேட்டேன். ‘நிலக்கடலைத் திருவிழாவுக்குப் போகலாம் வாங்க’னு கூப்பிட்டாரு. நம்ம ஊர்ல நெல் திருவிழா, சிறுதானியத் திருவிழாவைத்தான் பார்த்திருக்கோம். ஆனா, நிலக்கடலைத் திருவிழா சங்கதி புதுசா தெரியவே, உடனே வண்டி ஏறி நிலக்கடலைத் திருவிழா நடந்த இடத்துக்குப் போனோம்.

பெங்களூரு, பசவனகுடியில் கவிகங்காதேஸ்வர சுவாமி கோயில் வாசல்ல திருவிழா களைகட்டியிருந்தது. கண்ணுக்கு எட்டின வரையிலும், விதவிதமான நிலக்கடலை ரகங்களைக் குவிச்சு விற்பனை செய்துகிட்டிருந்தாங்க. நிலக்கடலையை வாங்கிக் கொறிச்சபடி, இந்தத் திருவிழா எப்படி உருவானதுனு கர்நாடக நண்பர்கிட்ட கேட்டேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick