மரம் செய விரும்பு! - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்! | Trees series - Uses of Trees - Pasumai Vikatan | பசுமை விகடன்

மரம் செய விரும்பு! - 12 - தீக்குச்சியாகும் பெருமரம்... 4 ஆண்டுகளில் நல்ல வருமானம்!

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சுற்றுச்சூழல்‘வனதாசன்’ ரா.ராஜசேகரன் - தொகுப்பு: ஆர்.குமரேசன் - படங்கள் : வீ.சிவக்குமார்

மிழர்களோடு தொன்மையான தொடர்புடையது ‘பெருமரம்’. அந்தக் காலத்தில் திருவிழா சமயங்களில் ‘வழுக்கு மரம் ஏறுதல்’ மிகச்சிறந்த பொழுதுபோக்கு. இன்றைக்கும் தமிழகத்தின் பல கிராமங்களில் வழுக்கு மரம் ஏறுதல் நடைமுறையில் இருக்கிறது. ஒவ்வோர் ஆண்டும் திருவிழாவுக்காக வழுக்கு மரத்தைத் தேர்வு செய்யும் பணியே திருவிழாபோல் நடக்கும். கோயில் பூசாரிக்கு அருள் இறங்கி, அவர் கைக்காட்டும் திசையிலிருந்து மரத்தைக் கொண்டு வருவார்கள். அந்தக் காலத்தில் கிராமங்களைச் சுற்றிப் பெருமரங்கள் பரவலாக இருக்கும். அதனால், எந்தத் திசையில் சென்றாலும் மரம் கிடைத்துவிடும். ஆனாலும், பூசாரி சொல்லிய திசையில் ஊர்க்காரர்கள் திரண்டு போய், வளைவு நெளிவு இல்லாமல் நேராக வளர்ந்த மரத்தைத் தேர்வு செய்வார்கள். பிறகு, அந்த மரத்தை வெட்டி ஊருக்குக் கொண்டு வருவார்கள்.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அந்த மரத்தைச் சுற்றி அமர்ந்துகொண்டு, பட்டையை உரித்துச் சோற்றுக்கற்றாழை கூழைத் தடவுவார்கள். பிறகு எண்ணெய், கேழ்வரகு கூழ் ஆகியவற்றைத் தடவித் தூக்கி நிறுத்துவார்கள். அதன்பிறகுதான் வழுக்கு மரம் ஏறுதல் நிகழ்ச்சி நடக்கும். தற்போது, இந்தப் பழக்கமும் கிராமங்களில் அரிதாகிக்கொண்டே வருகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick