‘‘வெள்ளாமை பங்கமாயிடுச்சு... தக்காளி தங்கமாயிடுச்சு!’’ | Now Tomato rates reach a new high - Pasumai Vikatan | பசுமை விகடன்

‘‘வெள்ளாமை பங்கமாயிடுச்சு... தக்காளி தங்கமாயிடுச்சு!’’

அலசல் ஜி.பழனிச்சாமி

ச்சத்தில் ஏறியிருக்கிறது தக்காளியின் விலை. முகநூல், வாட்ஸ்அப் எனச் சமூக வலைதளங்களிலும் கடந்த சில நாள்களாகத் தக்காளி குறித்தான பதிவுகள் பரவி வருகின்றன. இந்த விலையேற்றம் நுகர்வோரைப் பாதிப்புக்குள்ளாக்கி இருந்தாலும் விவசாயிகளுக்கு நன்மை கிடைத்திருக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

இதுகுறித்த விவாதங்களும் தொடர்ந்துவரும் நிலையில் உண்மை நிலை குறித்து, தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாநிலத்தலைவர் ‘கிருஷ்ணகிரி’ ராமுவிடம் பேசினோம். “வெள்ளாமை பங்கமாயிடுச்சு. அதனால தக்காளி தங்கமாயிடுச்சு. இப்ப உச்சத்துல இருக்கிற தக்காளி விலைபற்றி இப்படித்தான் சொல்லவேண்டியிருக்கிறது. தமிழ்நாட்டுல கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள்லதான் தக்காளிச் சாகுபடி அதிகமா நடக்குது. பொதுவா ஆடி, மார்கழி பட்டங்கள்ல தக்காளி நடவு செய்வாங்க. சீதோஷ்ண நிலை தோதா அமைஞ்சு நல்லபடியா பாராமரிச்சோம்னா, ஒரு ஏக்கர் நிலத்துல 35 டன் வரைக்கும் மகசூல் கிடைக்கும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick