ஆரோக்கியம் தரும் மரச்செக்கு எண்ணெய்!

பாரம்பர்யம்இ.கார்த்திகேயன் - படங்கள்: எல்.ராஜேந்திரன்

‘உடல் பருமன், ரத்தக்கொதிப்பு, செரிமானமின்மை, நெஞ்செரிச்சல், மாரடைப்பு போன்ற பாதிப்புகளுக்கு நாம் சமையலில் பயன்படுத்தும் சுத்திகரிக்கப்பட்ட பாக்கெட் எண்ணெயும் ஒரு காரணி’ என மருத்துவர்கள் மற்றும் உணவியல் நிபுணர்கள் சொல்லிவருகிறார்கள். அப்படி நாம் பயன்படுத்தும் பாக்கெட் எண்ணெய்க்கு மாற்றாக இயற்கை முறையில் தயாராகும் மரச்செக்கில் ஆட்டப்பட்ட எண்ணெயைத்தான் பரிந்துரைக்கிறார்கள் உணவியல் நிபுணர்கள்.

அதனால் சமீபகாலமாக மரச்செக்கு எண்ணெய் குறித்த விழிப்பு உணர்வும் அதன் பயன்பாடும் அதிகரித்துவருகின்றன. இதனால் முடங்கிக் கிடந்த மரச்செக்குகள் தற்போது உயிர்ப்பிக்கப்பட்டு வருகின்றன. இயற்கை ஆர்வலர்கள் பலரும் மரச்செக்கு அமைத்து எண்ணெய் ஆட்டி வருகிறார்கள். அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ஷீலாதேவி.

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் சந்தைத்தெருவில் உள்ளது ஷீலாதேவியின்  எண்ணெய் உற்பத்தியகம். தேங்காய் எண்ணெய்த் தயாரிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்த ஷீலாதேவியைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick