கதிராமங்கலம் போராட்டம்... கலக்கத்தில் மத்திய, மாநில அரசுகள்!

போராட்டம் கு.ராமகிருஷ்ணன் - படங்கள்:கே.குணசீலன்

ஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் அருகேயுள்ள கதிராமங்கலம் மற்றும் இதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த பல ஆண்டுகளாகப் பெட்ரோல்-கேஸ் எடுத்து வருகிறது ஓ.என்.ஜி.சி நிறுவனம். இதனால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதாக இப்பகுதி மக்கள் சொல்லிவந்த நிலையில், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாகக் கடந்த ஜூன் மாதம் ராட்சத இயந்திரங்கள் மூலமாகப் புதிய விரிவாக்கப் பணிகளில் ஈடுபட்டது ஓ.என்.ஜி.சி நிறுவனம். இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இங்கு ஆயிரத்துக்கும் அதிகமான காவல் துறையினரைக் குவித்துக் கடும் அடக்குமுறையை ஏவியது தமிழக அரசு.

இந்நிலையில், கடந்த ஜூன் 30-ம் தேதி இங்குள்ள ஓ.என்.ஜி.சி குழாயில் உடைப்பு ஏற்பட்டு விளைநிலத்தில் கச்சா எண்ணெய் பாய்ந்தோடியது. ‘தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நேரில் வந்து ஆய்வு செய்து இப்பிரச்னைக்குத் நிரந்தரத் தீர்வு காணும் வரை ஓ.என்.ஜி.சி அதிகாரிகளை இங்கு அனுமதிக்கமாட்டோம்’ என இப்பகுதி மக்கள் போராடத் துவங்கினர். அப்போது அவர்கள்மீது காவல்துறையினர் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலில் பலர் படுகாயமடைந்தனர். மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேர்மீது பிணையில் வர முடியாத பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தது காவல்துறை.

காவல் துறையின் இந்த அராஜகப் போக்கைக் கண்டித்தும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிரந்தரமாக வெளியேற வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்துக்கட்சிகள் சார்பில், கடந்த ஜூலை 10-ம் தேதி பெருந்திரள் பேரணி மற்றும் கண்டனப் போராட்டம் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கானோர் எழுச்சியுடன் கலந்துகொண்ட இப்போராட்டம் மத்திய, மாநில அரசுகளையும் ஓ.என்.ஜி.சி நிறுவனத்தையும் மிரட்சி அடைய வைத்துள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick