பிளாஸ்டிக் அரிசியா, போலி அரிசியா? - அறிவியல் சொல்லும் ஆதாரம்!

அலசல்

டந்த சில மாதங்களாகச் சமூக வலைதளங்களில் அதிகளவு அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளிகள்... பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டை ஆகியவை குறித்து வந்தவைதான். அவற்றை வைத்து பரப்பப்பட்ட ‘மீம்ஸ்’களும் பட்டையைக் கிளப்பின. ‘பிளாஸ்டிக் அரிசி மற்றும் பிளாஸ்டிக் முட்டை உண்மையிலேயே இருக்கின்றனவா? அவற்றைத் தயாரித்துக் கலப்படம் செய்ய முடியுமா?’ என்றெல்லாம் யோசிக்காமல், அந்தக் காணொளிகளைக் கண்டதுமே கலவரப்பட்டவர்கள் நிறைய பேர்.

அதைத்தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் நாளிதழ்களிலும் இதுகுறித்த செய்திகள் வெளியாகின. இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திச் சில நிறுவனங்கள், ‘சுத்தமான கலப்படமில்லாத இயற்கை அரிசி, இயற்கை சிறுதானியங்கள் எங்களிடம்தான் கிடைக்கின்றன’ என்று சொல்லி விளம்பரப்படுத்திக் கல்லா கட்டவும் முயன்றார்கள். பார்ப்பதற்கு நீரைப்போலத் தோற்றம் தந்தாலும் கானல்நீர் தாகம் தீர்க்காது.

அதுபோலத்தான் பிளாஸ்டிக் அரிசி மற்றும் முட்டைகள். ஐயம் திரிபட அறியாமல் ஒன்றை அப்படியே ஏற்பதைவிடுத்து, கேள்விகள் கேட்டு அறிதலே அறிவியல். அதுதான் பகுத்தறிவு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick