‘கொலை விளையும் நிலம்’ அதிரவைக்கும் ஆவணப்படம்!

பசுமைத் திரைபொன்.விமலா

வானம் பார்த்த பூமியாய் வறண்டு கிடக்கும் விவசாய நிலங்கள் ஒருபக்கம்... வயிற்றுக்கும் வாய்க்கும் வழியில்லாமல் ஈரத்துணியை இடுப்பில் கட்டிக்கொண்டு... கடனில் மூழ்கியுள்ள விவசாயிகள் மற்றொரு பக்கம் எனத் தண்ணீர் இல்லாமல் தத்தளிக்கிறது தமிழகம்.

கடந்த ஆண்டு எதிர்ப்பார்த்த பருவமழை பொய்த்துப் போனதால் கொஞ்ச நஞ்சமிருந்த நம்பிக்கையையும் இழந்து, கொத்துக் கொத்தாகத் தற்கொலை செய்துகொண்டார்கள் விவசாயிகள். தமிழகத்தின் கடைக்கோடி நிலத்தில் ஆரம்பித்த போராட்டம், டெல்லி வரை தொடர்ந்தது. ஆனாலும், விவசாயியின் நிலைமை இன்னமும் பரிதாபத்துக்குரியதாகவே இருந்து வருகிறது. இப்படிக் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் விவசாயிகளின் பிரச்னைகளை அவர்களின் பார்வையிலிருந்தே பேசுகிறது ‘கொலை விளையும் நிலம்’ எனும் ஆவணப்படம்.

ஊடகவியலாளர் க.ராஜீவ்காந்தி இயக்கியுள்ள இந்த ஆவணப்படம், விவசாயிகளின் தற்கொலைச் சம்பவங்களை ‘கொலைகள்’ என்றே சித்திரிக்கிறது. கணவனை, தகப்பனை, தாயை... எனத் தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்து வெடித்த நிலத்தைப் பார்த்துக் கண்ணீர் சிந்தும் விவசாயக் குடும்பங்களைக் கண்முன் நிறுத்துகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick