அம்மா உயிர் உரம்... ரூ 5 கோடியில் சோலார் விளக்குப் பொறி...

வேளாண் மானியக் கோரிக்கையில் அறிவிப்பு மழை!அறிவிப்புத.ஜெயகுமார்

விவசாயக் கடன் தள்ளுபடி, காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மாநிலம், கதிராமங்கலம் எரிவாயு பிரச்னை, நெடுவாசல் என்று விவசாயப் பிரச்னைகள் மேலோங்கி இருக்கும் சூழலில், கடந்த ஜூலை 5-ம் தேதி வேளாண் மானியக் கோரிக்கை சட்டசபையில் நடந்தேறியது. அப்போது வேளாண்துறை அமைச்சர் ரா.துரைக்கண்ணு மானியக் கோரிக்கையின்போது சில திட்டங்களை அறிவித்தார். அவர் அறிவித்த திட்டங்களில் முக்கியமானவை இங்கே தொகுக்கப்பட்டுள்ளன.

* இயற்கை வேளாண்மைத் தொழில்நுட்பத்தை விவசாயிகள் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 2014-15-ம் ஆண்டுகளில் ‘திரவ உயிர்உரத் திட்டம்’ அறிவிக்கப்பட்டது. அதன்படி ஆண்டுதோறும் 6 லட்சம் லிட்டர் திரவ உயிர்உரம் உற்பத்தி செய்யப்படுகிறது. அதேபோன்று 3 ஆயிரம் மெட்ரிக் டன் உயிர் உரமும் துறைமூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டம், இனி ‘அம்மா உயிர்உரம்’ என்ற பெயரில் தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

* நஞ்சில்லா வேளாண்மையின் ஒருபகுதியாகப் பயிர்ச் சாகுபடியில் தீமை செய்யும் பூச்சிகளைக் கவர்ந்து அழிக்கும் வகையில், சூரியசக்தியில் இயங்கும் விளக்குப் பொறிகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தின்கீழ் 25 ஆயிரம் விளக்குப் பொறிகள் 5 கோடி ரூபாய் செலவில் விவசாயிகளுக்கு வழங்கப்படும். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick