குடிமராமத்து... விரிந்தன வாய்க்கால்கள்... இணைந்தன குளங்கள்...

சூழல்ஆர்.குமரேசன் - படங்கள்: வீ.சிவக்குமார்

குளங்கள், வாய்க்கால்கள் போன்றவற்றைச் சீரமைக்கும் விதமாகக் குடிமராமத்துத் திட்டத்தை அறிவித்து, அதை மாநிலம் முழுவதும் செயல்படுத்தி வருகிறது தமிழக அரசு. சுற்றுச்சூழல் மீது அக்கறைகொண்ட மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பலர், இத்திட்டத்தைச் சரியாகப் பயன்படுத்திக்கொண்டு தங்களது மாவட்டத்தைச் செழிப்பாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களில் ஒருவராகத் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் வினய், மாவட்டத்தில் குடிமராமத்துப் பணிகளைச் சிறப்பாகச் செய்துவருகிறார்.

நீர்நிலைகளைத் தூர்வாருவதோடு மட்டும் நிற்காமல் நீர்நிலைகளுக்குத் தண்ணீர் வரக்கூடிய வரத்து வாய்க்கால் தொடங்கும் இடத்திலிருந்து முடியும் இடம் வரை ஆக்கிரமிப்புகளை அகற்றிப் புனரமைக்கும் பணிகளையும் செய்துவருகிறார். இதனால், ஒரு குளத்திலிருந்து மற்றொரு குளம் எனத் தொடர்ச்சியாக உள்ள அனைத்துக் குளங்களும் வாய்க்கால்களால் இணைக்கப்பட்டுள்ளன. இந்தப் பணி சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாராட்டைப் பெற்றுள்ளது. தவிர, தமிழக அளவில் நடந்த குடிமராமத்துப் பணிகள் தொடர்பான கூட்டத்தில், திண்டுக்கல்லில் நடந்துவரும் பணி தமிழக அரசு உயரதிகாரிகளின் பாராட்டையும் பெற்றுள்ளது.

இந்தத் திட்டத்தில் அந்தந்தப் பகுதியிலுள்ள தனியார் தொழிற்சாலைகள், கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றையும் ஈடுபடுத்தியிருக்கிறார் வினய். ஒவ்வொரு தொழிற்சாலையும் சமுதாய மேம்பாட்டுக்கான பங்களிப்பைச் செலுத்தும் வகையில், ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலவிட வேண்டும் என்பது அரசு விதி. அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள தொழிற்சாலைகளின் பங்களிப்பை நீர்நிலைகளைப் புனரமைக்கும் பணிக்கு மடை மாற்றியுள்ளார் வினய். இப்பணியில் ஈடுபடும் நிறுவனமே அடுத்த ஐந்தாண்டுகளுக்குச் சம்பந்தப்பட்ட நீர்நிலைகளையும் வரத்து வாய்க்கால்களையும் பாதுகாக்க வேண்டும் என்ற புரிந்துணர்வு ஒப்பந்தமும் போடப்பட்டுள்ளது. இதனால், மாவட்டத்தில் பல நீர்நிலைகள் புத்துயிர் பெற்று அடுத்துவரும் மழைக்காகக் காத்திருக்கின்றன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick