பசுமைப் பணியில் திண்டி மா வனம்!

முயற்சிரா.கு.கனல் அரசு - படங்கள்: வீ.சிவக்குமார்

‘ஆட்டைக் கடிச்சு, மாட்டைக் கடிச்சு, கடைசியில மனுசனையே கடிக்கிறயா?’ எனக் கிராமங்களில் சொல்வார்கள். ஆனால், உண்மையில் மனிதன்தான் இயற்கை வளங்கள் அனைத்தையும் அழித்து, இறுதியாகப் பூமிக்கு மழையைக் கொண்டுவரும் மழைத்தூதர்களான மரங்களையும் அழித்தொழித்து விட்டான். அதன் விளைவு, பருவம் தவறிய மழை; வாட்டி எடுக்கும் வெயில்; அடிக்கடி மிரட்டும் புயல்... எனத் தன் சீற்றத்தைப் பல வகைகளிலும் காட்டத் தொடங்கியுள்ளது இயற்கை.

ஒரு பக்கம் இயற்கை வளங்களை அழித்துக் கொண்டே போனாலும் இன்னொரு பக்கம் இயற்கை வளங்களை மீட்டெடுப்பதில் ஈடுபடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்தச் சமன்படுத்தும் பணியால்தான் பூமிப்பந்து குற்றுயிரும் கொலையுயிருமாவது இன்னமும் சுற்றிக்கொண்டிருக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick