தென்மேற்குப் பருவமழை எப்படியிருக்கும்?

முன்னறிவிப்புதுரை.நாகராஜன்

 தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், பருவமழை தொடங்கும் காலங்களில் மழை குறித்த முன்னறிவிப்பை வெளியிடுவது வழக்கம். அதேபோல், இந்த ஆண்டுக்கான (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) தென்மேற்குப் பருவமழை குறித்த முன்னறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அந்த அறிக்கையில், “கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியில் தென்மேற்குப் பருவமழை நிலவரம் குறித்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கடல் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் அதன் தென்மண்டல காற்றழுத்தக் குறியீடு ஆகியவற்றைக்கொண்டு, ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட ‘மழை மனிதன்’ என்னும் கணினி மென்பொருளின் மூலம் கணக்கிடப்பட்டது. ஏற்கெனவே மழை குறித்துச் சேகரிக்கப்பட்ட புள்ளிவிவரங்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன. அதனடிப்படையில் 2017-ம் ஆண்டில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தென்மேற்குப் பருவமழையின் மூலம் கிடைக்கக்கூடிய மழை அளவு கணிக்கப்பட்டுள்ளது.

சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி, நீலகிரி, கோயம்புத்தூர், சென்னை, ஈரோடு, கடலூர், மதுரை, தேனி, திண்டுக்கல், காஞ்சிபுரம், கன்னியாகுமரி, வேலூர், விழுப்புரம் மற்றும் சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் சராசரி அளவில் மழை கிடைக்கும்.

ராமநாதபுரம், நாகப்பட்டினம், திருவாரூர், கரூர், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, தஞ்சாவூர், திருச்சி, திருப்பூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சராசரி அளவைவிடக் குறைவாக மழை கிடைக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick