வறண்ட நிலத்திலும் வருமானம் கொடுக்கும் கொடுக்காப்புளி!

புரட்டாசியில் நடவு செய்யலாம்!மகசூல்ஆர்.குமரேசன் - படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்

“அடிக்கடி தோட்டத்துக்குப் போய் விவசாயத்தைக் கவனிக்க முடியாது. தண்ணி ரொம்பக் குறைவாத்தான் இருக்கு. உரம், பூச்சிக்கொல்லிச் செலவை நினைச்சாலே பயமா இருக்கு” எனக் கவலைப்படும் விவசாயிகளாக இருந்தாலும் சரி... “செடியை நடவு  செஞ்சோமா, அறுவடை  பண்ணிணோமா, பணத்தை எண்ணுணோமா” என நினைக்கும் விவசாயிகளாக இருந்தாலும் சரி... இரு தரப்பினருக்குமே ஏற்ற பயிராக இருப்பது கொடுக்காப்புளி.

அவ்வப்போது பாசனம், மகசூல் சமயத்தில் கொஞ்சம் பராமரிப்பு இவற்றை மட்டும் செய்து வந்தாலே  ஒரு ஏக்கர் நிலத்திலிருந்து ஆண்டுக்கு ஒன்றரை லட்ச ரூபாய் அளவுக்கு வருமானம் கொடுக்கிறது கொடுக்காப்புளி.

முப்பது வயதைக் கடந்த பலரும் தமது பள்ளிக் காலங்களில் கொடுக்காப்புளியைச் சுவைத்து இருப்பார்கள். இன்றைக்கு இருப்பதுபோல விதவிதமான தின்பண்டங்கள் அந்தக் காலங்களில் இல்லையென்றாலும், அவற்றைவிட அதிகச் சுவையையும் மகிழ்ச்சியையும் கொடுத்தவை மாங்காயும் கொடுக்காப்புளியும். அப்போது, கிராமங்களின் வரப்போரங்கள், கிணற்று மேடுகள், வீடுகளுக்கு அருகிலுள்ள தோட்டங்கள் என ஆங்காங்கு கொடுக்காப்புளி மரங்கள் இருக்கும். பறவைகள் சாப்பிட்டு இடும் எச்சம் மூலமாகத் தானாகவே இம்மரம் பல இடங்களிலும் பரவியிருந்தது. தோட்டங்களில் வேலிப்பயிராகவும் சில விவசாயிகள் இதை நடவு செய்திருப்பார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!