கொட்டிக் கொடுக்கும் பூசணிச் சாகுபடி!

4 ஏக்கர்... 85 நாள்கள்... ரூ 2.2 லட்சம் லாபம்! மகசூல்கு.ராமகிருஷ்ணன் - படங்கள்: அரவிந்த்

ழைப்பு மட்டுமே எந்தத் தொழிலிலும் வெற்றியைக் கொடுத்துவிடாது. சாமர்த்தியமான வியூகங்களும் சாதுர்யமான தொழில்நுட்பங்களும் இருந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும். இது விவசாயத்துக்கும் பொருந்தும்.

ஒவ்வொரு பருவத்திலும் சில பயிர்கள் மட்டுமே நோய்களால் பாதிக்கப்படும். அந்தப் பருவத்தில் குறிப்பிட்ட பயிரைச் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்த்துவிடுவார்கள். குறிப்பாக, கோடைக்காலத்தில் பூசணியைச் சுருட்டை நோய் தாக்கும் என்பதால், அதைப் பயிரிடுவதைத் தவிர்ப்பார்கள். அந்த நேரத்தில், சந்தையில் பூசணி வரத்து குறைந்து விலை அதிகரித்துவிடும். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டு தக்க முன்னேற்பாடுகளோடு, கோடைக்காலத்தில் பூசணியைப் பயிர் செய்து நல்ல லாபம் ஈட்டியிருக்கிறார் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த பிச்சையா.

கந்தர்வக்கோட்டை தாலூகா, முதுகுளம் கிராமத்தில் பிச்சையாவின் தோட்டம் இருக்கிறது. இவர் தன்னுடைய 4 ஏக்கர் நிலத்தில் பூசணிச் சாகுபடி செய்து அபரிமிதமான லாபம் எடுத்துள்ளார். ஒரு மதிய வேளையில், பூசணிக்காய்களை விற்பனைக்காக வண்டியில் ஏற்றிக்கொண்டிருந்த பிச்சையாவைச் சந்தித்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick