விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்... | Manoharan incressing rice seed in dharapuram - Pasumai Vikatan | பசுமை விகடன்

விதைநெல் உற்பத்தியில் தடம் பதிக்கும் தாராபுரம்...

விதைப் பண்ணைஜி.பழனிச்சாமி - படங்கள்: ரமேஷ் கந்தசாமி

பெரும்பாலான விவசாயிகள் மேம்படுத்தப்பட்ட மற்றும் வீரிய ரக விதை நெல் வகைகளை மட்டுமே விதைப்புக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். இதனால், விதை நெல் உற்பத்தி, நெல் சாகுபடிக்கு இணையான தொழிலாக வளர்ந்துவருகிறது. குறிப்பாக, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பகுதியில் விதைநெல் உற்பத்தி அதிகளவில் நடைபெறுகிறது. இப்பகுதியில் உள்ள விதைநெல் உற்பத்தி மையங்கள் மூலம் ஆண்டுக்கு 50 ஆயிரம் டன் அளவுக்கு நெல் உற்பத்தி செய்யப்படுகிறது. சமீபகாலமாக விவசாயத்துக்குப் புதிதாக வரும் இளைஞர்கள் பலரும் விதைநெல் உற்பத்தியில் கால்பதித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர்தான் கே.மனோகரன். கட்டடப் பொறியியல் பட்டம் பெற்ற இவர், தற்போது விதைநெல் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick