சின்னச் சின்ன நுண்ணுயிரிகள் பெரிய பெரிய லாபம்! உதவிக்கு வரும் உயிரியல் - 17

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
இ.எம் தொழில்நுட்பம் வணிகமல்ல... சேவை!இடுபொருள்முனைவர் அ.உதயகுமார்தொகுப்பு: ரா.கு.கனல்அரசு, படங்கள்: வீ.சிவக்குமார்

ந்த உலகம், மனிதர்களுக்கு மட்டுமானதல்ல; கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்கள் உள்படக் கோடிக்கணக்கான உயிர்களுக்கும் உறைவிடம். நாங்கள்தான், உலகை ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறோம் என எண்ணிக் கொண்டிருக்கிறான் மனிதன். ஆனால், உண்மையில் உலகை ஆட்டிவைப்பவை பூச்சிகளும், கண்ணுக்குத் தெரியாத நுண்ணுயிர்களும்தாம். நுண்ணுயிர்கள் என்றாலே மனிதனுக்கு எதிரானவை என்ற பொதுவான எண்ணம் உண்டு. உண்மையில் அப்படியில்லை. தன்னுடைய அனைத்துப் படைப்பிலும் இரண்டு வாசல்களை வைத்தே இருக்கிறது இயற்கை. ஒரு வாசல் அடைத்தால், இன்னொரு வாசல் திறக்கும். அதன்படி, தீமை செய்யும் நுண்ணுயிர்களைக் கட்டுப்படுத்த, சில நன்மை செய்யும் நுண்ணுயிர்களையும் படைத்துள்ளது.

கடந்த பதினாறு இதழ்களாக உங்களுடன் எழுத்து வடிவில் உரையாடிக்கொண்டிருந்த நான், பணிச்சுமை காரணமாக விடைபெற இருக்கிறேன். இந்தத் தொடர், நான் எதிர்பார்த்ததைவிடப் பலமடங்கு விவசாயிகளிடம் சென்று சேர்ந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. பசுமை விகடனின் வாசகர்கள் உலகமெங்கும் இருக்கிறார்கள் என்பதை எனக்கு உணர்த்தியது இத்தொடர். இன்னும் சில விளக்கங்களைச் சொல்லி நிறைவுசெய்கிறேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick