மாடுகளுக்கு எந்த நேரத்தில் கருவூட்டல் செய்யலாம்?

சினை மேலாண்மை பற்றிப் பேசும் குறுந்தொடர் - 3கால்நடைமுனைவர் க.கிருஷ்ணகுமார், தொகுப்பு: த.ஜெயகுமார், படங்கள் ரா.திலீப்குமா

டந்த இதழில் கன்றுப் பராமரிப்பு பற்றிப் பார்த்தோம். இந்த இதழில் சினைப்பிடித்தல் பற்றிப் பார்ப்போம்...

பிறந்து 12 மாதங்கள் கடந்த கன்றுகளை,  கிடாரிகள் என்று அழைக்கப்படும். வளரும் சீதோஷ்ண நிலை, இனத்தின் தன்மை, ஊட்டச்சத்து இவற்றைப் பொறுத்து, கலப்பின கிடாரிகள் 8-லிருந்து 18-வது மாதத்திற்குள் பருவத்துக்கு வந்துவிட வேண்டும். இதில் நாட்டு மாட்டு கிடாரிகள் பருவத்துக்கு வருவதற்கு 24 மாதங்கள் ஆகும். இந்த மாதங்களுக்குள் பருவத்துக்கு வரவில்லையென்றால், அந்தக் கிடாரிக்கு ஏதோ பிரச்னை இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

உடனே, அதற்குத் தகுந்த மருத்துவத்தை அளிக்க வேண்டும். பொதுவாக, பருவ சுழற்சி காலம் 21 நாள்களுக்கு ஒருமுறை வரும். சினை பருவத் தருணம் 18 மணிநேரத்திலிருந்து 24 மணிநேரம் வரை இருக்கும். இதில் கோடைக்காலத்தில் சினைப் பருவத்தருணம் ஏறக்குறைய 18 மணி நேரமாகவும் குளிர்காலத்தில் 24 மணி நேரமாகவும் இருக்கும். அதற்குள் இயற்கை அல்லது செயற்கை முறையில் கருவூட்டல் செய்துவிட வேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick