நீங்கள் கேட்டவை - ‘‘சிறுதானிய இயந்திரங்கள் எங்கு கிடைக்கும்?’’

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறாபாண்டி

‘‘சிறுதானியங்களைப் பயன்படுத்தி பிஸ்கட், ரொட்டி போன்ற மதிப்புக்கூட்டிய பொருள்களைத் தயாரிக்க விரும்புகிறோம். சிறு தானியத்தை மதிப்புக் கூட்டும் இயந்திரங்கள் குறித்த விவரம் எங்கு கிடைக்கும்?’’

கே.பார்வதி, திருவள்ளூர்.


திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சிறு தானிய மகத்துவ மைய விஞ்ஞானி முனைவர் மோ.சண்முகப்பிரியா பதில் சொல்கிறார்.

‘‘கோயம்புத்தூர், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக விரிவாக்கக் கல்வி இயக்ககத்தின் மூலம் நடத்தப்படும் தீவிரச் சிறுதானியச் சாகுபடி திட்டம் மற்றும் ஊட்டச்சத்தினை உறுதிப்படுத்தும் திட்டம்மூலம் மதிப்புக்கூட்டலுக்கான இயந்திரத் தொகுப்புகளை உழவர்களின் செயல் விளக்கத்திற்காகத் திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தலில் உள்ள சிறுதானிய மகத்துவ மையத்திற்கு வழங்கியுள்ளது. இந்தத் தொகுப்பில் சிறுதானியக் கல் மற்றும் தூசி நீக்கும் இயந்திரம்,  தானியம் வறுக்கும் இயந்திரம், உமி நீக்கும் இயந்திரம், சிறுதானிய மாவு அரைக்கும் இயந்திரம், மாவு சலிக்கும் இயந்திரம் மற்றும் மாவு கலக்கும் இயந்திரம் போன்றவை உள்ளன.

சிறுதானியக் கல் மற்றும் தூசி நீக்கும் இயந்திரம்

அறுவடை செய்த சிறுதானியங்களை இவ்வியந்திரத்தில் கொட்டினால் அதில் உள்ள சிறு சிறு கற்கள், மண் மற்றும் தூசிகளை இவ்வியந்திரம் அகற்றுகிறது. ஒரு மணி நேரத்துக்கு 500 கிலோ வரை சுத்தம் செய்யும் திறன் கொண்டது.

சிறுதானியம் வறுக்கும் இயந்திரம்

சிறுதானியங்களை வறுக்கும் இயந்திரம் கொண்டு உலர்ந்த தானியத்தை, ஒரே நேரத்தில் 15 கிலோ வறுக்கலாம். இப்படி வறுத்த தானியங்களை அரிசியாக்கும்போது அவை மணமாக இருக்கும்.

உமி நீக்கும் இயந்திரம்

சிறுதானிய உமி நீக்கும் இயந்திரத்தின் மூலம், ஒரு மணிநேரத்தில் 100 கிலோ சிறுதானியத்தை உமி நீக்கலாம். ஒரே நேரத்தில் 15 கிலோ வரை இவ்வியந்திரத்தைக்கொண்டு உமியை நீக்க முடியும்.

மாவு அரைக்கும் இயந்திரம்

சிறுதானிய அரிசியிலிருந்து சத்து மாவு, தோசை மாவு, அடை மிக்ஸ் போன்றவைகளைத் தயாரிக்கச் சிறுதானிய அரிசியை அரைக்க வேண்டும். இவ்வியந்திரம் ஒரு மணி நேரத்தில் 30 கிலோ சிறுதானிய அரிசியை மாவாக்கும் திறன் கொண்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick