குளத்தில் மீன்... மீன் வலைப்பந்தலில் கீரை!

குறுந்தொடர் - 3பக்கத்து வயல்ஆர்.குமரேசன்

ந்தமான் தீவுகளில் தென்னை மற்றும் பாக்குதான் பெரும்பாலான விவசாயிகளின் வாழ்வாதாரமாக இருக்கிறது. ஆனால், தற்போது காய்கறிச் சாகுபடி செய்யப் பலரும் ஆர்வம்காட்டி வருகிறார்கள். போர்ட் பிளேயருக்கு அருகேயுள்ள பகுதியில் முன்னோடி விவசாயி தப்பன் மண்டல் என்பவர் விவசாயம் செய்துவருகிறார். அவருடைய தோட்டத்தில், நுழைவாயிலில் மீன்குட்டை அமைத்து, கரையோரங்களில் வாழை, காய்கறி எனப் பயிரிட்டிருக்கிறார். அதோடு பந்தல் அமைத்து லோபியா (பொறியல் தட்டை) பயிரையும் சாகுபடி செய்திருந்தார். “நான் மேற்கு வங்காள மாநிலத்தைச் சேர்ந்தவன். அந்தமானுக்கு வந்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. விவசாயத்தில் எனக்கு மிகுந்த ஈடுபாடு உண்டு. நான் இங்கு விவசாயக் கூலியாகத்தான் வந்தேன்.

தற்போது சொந்தமாக நிலம் வாங்கி விவசாயம் செய்கிறேன். விவசாயம் என்னைக் கைவிடவில்லை. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு, மூன்று ஏக்கர் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்யத் தொடங்கினேன். வழக்கமான விவசாயத்தில் பல தோல்விகளைச் சந்தித்தேன். அப்போது, இந்திய வேளாண் ஆராய்ச்சிக்கழக விஞ்ஞானிகளின் ஆலோசனை எனக்கு உதவியாக இருந்தது. குறிப்பாக, வேல்முருகன் சார் பல்வேறு ஆலோசனைகளைச் சொல்லிக் கொடுத்துக்கொண்டேயிருக்கிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick