மாற்றுச் சந்தைக்கு மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18 | Cost and effective support for agriculture - Pasumai Vikatan | பசுமை விகடன்

மாற்றுச் சந்தைக்கு மதிப்புக்கூட்டல் முக்கியம்! - விளையும் விலையும்! - 18

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
சந்தைக்கு வழிகாட்டும் தொடர்அனந்து, தொகுப்பு: க.சரவணன்

வெகுஜனச் சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

கடந்த சில வாரங்களாக எனக்குச் செல்போனில்வரும் அழைப்புகளில் பெரும்பான்மையானவை ‘பசுமை விகடன்’ வாசகர்களின் அழைப்புகள்தான். அவர்களின் முக்கியமான கேள்வி, ‘நாங்கள் விளைவிக்கும் இயற்கை விளைபொருள்களை ரீஸ்டோர் அல்லது ஓ.எஃப்.எம் அங்காடிகள்மூலம் கொள்முதல் செய்துகொள்ள முடியுமா?’ என்பதுதான்.

இந்தச் சில அங்காடிகள் எப்படி அனைத்து விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்ய முடியும் என்பதை யோசித்துப் பார்க்க வேண்டும். இதுகுறித்து, இங்கு எழுதுவதற்கு முக்கியக் காரணம், இதுபோன்ற இயற்கை விளைபொருள்களுக்கான அண்மைச் சந்தைகளை நீங்களே உருவாக்கிக் கொள்ள வேண்டும் என்பதுதான். கொஞ்சம் மெனக்கெட்டால் கட்டாயம் உருவாக்கிவிட முடியும். இதுபோன்ற முயற்சிகள்மூலம் சந்தையை நம் வசப்படுத்தி, ஜனநாயகப்படுத்த வேண்டியது அவசியம். ஆர்வமும் அக்கறையும் உள்ளவர்களுக்கு வழிகாட்ட நாங்கள் தயாராக இருக்கிறோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick