நெல், மக்காச்சோளம், நிலக்கடலையில் பூச்சிகள், நோய்கள்... தாக்கலாம்!

முன்னறிவிப்புதுரை.நாகராஜன்

ற்போது நிலவும் தட்பவெப்பநிலையில், பயிர்களைத் தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்கள் குறித்தும் அவற்றைக் கட்டுப்படுத்துவது குறித்தும், தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் உள்ள சாராம்சங்கள் இங்கே...

நெல்

தற்போதைய தட்பவெப்பநிலையில், நெல்லில் இலைச்சுருட்டுப் புழு மற்றும் தண்டுத் துளைப்பான் ஆகியவற்றின் தாக்குதல் இருக்கும். திருநெல்வேலி, சேலம், கன்னியாகுமரி, தேனி, திருவாரூர், விழுப்புரம், தர்மபுரி, மதுரை, தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் இந்தப் புழுக்களின் தாக்குதல் அதிகமாகக் காணப்படுகிறது. வயலில் ஏக்கருக்கு ஒரு விளக்குப்பொறி வீதம் வைத்து, இந்தப் புழுக்களுடைய தாய் அந்துப்பூச்சிகளின் நடமாட்டத்தைக் கண்டு அழிக்கலாம். கன்னியாகுமரி மாவட்டத்தில் புகையான் தாக்குதல் காணப்படுகிறது. 3 சதவிகித வேப்பெண்ணெய் கரைசல் (10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி வேப்பெண்ணெய்) தெளித்துப் புகையானைக் கட்டுப்படுத்தலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick