குவிந்த விவசாயிகள்... குலுங்கிய டெல்லி!

போராட்டம்க.சரவணன்

டந்த நவம்பர் 19-ம் தேதியிலிருந்து 21-ம் தேதி வரை நாடு முழுவதுமிருந்து அலையலையாக வந்து இறங்கிய விவசாயிகளால் திணறிப்போனது டெல்லி ரயில் நிலையம். இருபத்தைந்து மாநிலங்களைச் சேர்ந்த 184 விவசாய அமைப்புகள், ‘அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு’ என்ற பெயரில் ஒன்றிணைந்து... டெல்லியில் போராட்டம் நடத்தின.

நவம்பர் 20-ம் தேதி காலை ராம்லீலா மைதானத்திலிருந்து, நாடாளுமன்ற வீதிக்குப் பேரணியாகச் சென்ற போராட்டக் குழுவினர், ‘விவசாயிகள் விடுதலை நாடாளுமன்ற’த்தை நடத்தினர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick