பி.டி பருத்தியை வேளாண்துறை பரிந்துரைக்கவில்லை!

சூழல்கு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீக்‌ஷித்

பெரம்பலூர் மாவட்டத்தில் பருத்திக்குப் பூச்சிக்கொல்லி தெளிக்கும்போது ஏற்பட்ட பாதிப்பால், கிட்டத்தட்ட இருநூறு பேர் மரணத்தின் விளிம்பு வரை சென்று உயிர் தப்பியுள்ளனர்.

வேளாண்மைத்துறை பரிந்துரைத்துள்ள பூச்சிக்கொல்லி அளவு, அதைக் கலக்கும் முறை,  அதைத் தெளிக்கும்போது மேற்கொள்ளப்படவேண்டிய தற்காப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தத் தகவல்களும் இப்பகுதி விவசாயிகளில் பெரும் பாலானோருக்குத் தெரிய வில்லை என்பதுதான் வேதனை.  பல விவசாயிகள் எச்சரிக்கையோடு பூச்சிக் கொல்லிகளைக் கையாள்கிறார்கள். இருந்தாலும், இவர்களின் உயிரோடு விளையாடியிருக்கிறது மோனோ குரோட்டாபாஸ்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick