போலி உரம்!

கையும் களவுமாகப் பிடித்த விவசாயிகள்... தயக்கம் காட்டிய அதிகாரிகள்!இ.கார்த்திகேயன்

சாயன உரங்கள் மற்றும் பூச்சிக் கொல்லிகளின் தேவை அதிகமாக இருப்பதால், அவற்றிலும் கலப்படம் செய்ய ஆரம்பித்துவிட்டனர் உர வியாபாரிகள். கடந்த சில ஆண்டுகளாகவே அவ்வப்போது இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கிளம்பி வந்த சூழ்நிலையில், தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் தாலூகாவில் உள்ள நாகலாபுரத்தில், ஒரு தனியார் உரக்கடையில் போலியான டி.ஏ.பி உரம் விற்பனை செய்யப்பட்டதை விவசாயிகள் கையும் களவுமாகப் பிடித்திருக்கின்றனர்.

இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் நாராயணசாமி, “எங்க சங்கத்தைச் சேர்ந்த சில விவசாயிகள் நாகலாபுரத்திலுள்ள ‘பொன்ராம் ஏஜென்ஸி’ங்கிற உரக்கடையில் ‘ஸ்பிக்’ நிறுவனத்தோட உர மூட்டைகளை வாங்கியிருக்காங்க. அந்த உரத்தை கையில எடுத்துப் பார்த்தப்போ வழக்கமான பதத்துல இல்லாம, வித்தியாசமான வாசனையோட இருந்திருக்கு. இதப்பத்தி விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டங்கள்ல புகார் கொடுத்தோம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick