4 ஏக்கர்... 120 நாள்கள்... ரூ.2 லட்சம்! குஷியான லாபம் தரும் குத்துக்கடலை

மகசூல்ஜி.பழனிச்சாமி, படங்கள்: தி.விஜய்

ண்டு முழுவதும் தேவையும் சந்தை வாய்ப்பும் இருக்கும் விளைபொருள்களில் ஒன்று நிலக்கடலை. எண்ணெய் எடுக்க, சட்னி தயாரிக்க, உணவுப் பதார்த்தங்கள் செய்ய... எனப் பலவிதங்களில் நிலக்கடலை பயன்படுகிறது. இறவை, மானாவாரி ஆகிய இரண்டு முறைகளிலுமே நிலக்கடலைச் சாகுபடி செய்யப்பட்டுவருகிறது. இதற்குச் சத்தான சந்தை வாய்ப்பு இருப்பதால், பெரும்பாலான மானாவாரி விவசாயிகளின் தேர்வாக இருக்கிறது நிலக்கடலை. அந்த வகையில், தொடர்ச்சியாக இயற்கை முறையில் மானாவாரிப் பயிராக நிலக்கடலையைச் சாகுபடி செய்து வருகிறார் கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி பி.ஆர்.சுப்பிரமணியன்.

மானாவாரி துவரை பற்றிய கட்டுரை மற்றும் பஞ்சகவ்யா தொடர் ஆகியவைமூலம் பசுமை விகடன் வாசகர்களுக்கு ஏற்கெனவே அறிமுகமானவர்தான் சுப்பிரமணியன். அன்னூர் அடுத்துள்ள பட்டக்காரன்புதூர் கிராமத்தில் சுப்பிரமணியனின் தோட்டம் இருக்கிறது. ஒரு முற்பகல் வேளையில் வயலில் மும்முரமாய் வேலை செய்துகொண்டிருந்த சுப்பிரமணியனைச் சந்தித்தோம். மகிழ்ச்சியுடன் நம்மை வரவேற்ற சுப்பிரமணியன், வேலைகளை முடித்துவிட்டு நம்முடன் பேச ஆரம்பித்தார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick