நீங்கள் கேட்டவை - இயற்கை விவசாயத்துக்கு ஏற்றது - விசைத் தெளிப்பானா, கைத்தெளிப்பானா?

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
புறாபாண்டி, படங்கள்: வீ.சிவக்குமார்

‘‘நகரத்திலிருந்து கிராமத்துக்கு வந்து இயற்கை முறையில் விவசாயம் செய்யத் தொடங்கியுள்ளோம். இயற்கை விவசாய நுட்பங்கள் மற்றும் உயிர் உரங்கள், பூஞ்சணங்கள் குறித்த விவரங்களைச் சொல்லுங்கள்?’’

கே.சுப்புலட்சுமி, புவனகிரி.


கோயம்புத்தூரில் உள்ள மத்தியக் கரும்பு இனப்பெருக்கக் கழகத்தின் ஓய்வுபெற்ற மூத்த விஞ்ஞானி முனைவர் எஸ்.ஈஸ்வரமூர்த்தி பதில் சொல்கிறார். ‘‘உலகமே இயற்கை விவசாயத்தை நோக்கிப் பயணம் செய்துகொண்டிருக்கிறது. இயற்கை விவசாயத்தைக் கொஞ்சம் அறிவியல் பார்வையில் தெரிந்துகொண்டால், நாம் எதிர்பார்க்கும் விளைச்சலை எடுக்க முடியும். இயற்கை விவசாயம் செய்பவர்கள், கைத்தெளிப்பான் மூலம்தான் பூச்சிவிரட்டி மற்றும் இடுபொருள்களைத் தெளிக்க வேண்டும். ரசாயனப் பூச்சிக்கொல்லியைப் புகைபோலத் தெளிப்பார்கள். ரசாயனப் பூச்சிக்கொல்லிகளில் தொடுநஞ்சு, ஊடுருவும் நஞ்சு என்று இரண்டு வகை உள்ளன. இந்த நஞ்சுக்குத் தக்கபடி தெளித்தால்போதும்.  ஆனால், இயற்கைப் பூச்சிவிரட்டியை ‘பவர் ஸ்பிரேயர்’ என்று சொல்லப்படும் ‘விசைத் தெளிப்பான்’மூலம் புகைப்போலத் தெளித்தால் பலன் குறைவாகத்தான் கிடைக்கும். விசைத் தெளிப்பானில் நாசிலை மாற்றி, தண்ணீர் தெளிப்பது மாதிரியும்கூடப் பயன்படுத்தலாம். ஆனாலும், கைத்தெளிப்பான் அளவுக்குப் பலன் கொடுக்காது. இயற்கைப் பூச்சிவிரட்டி செடி முழுவதும் நனைய வேண்டும். அதாவது, செடிகள் குளித்ததுபோல இருக்க வேண்டும். அப்போதுதான், பூச்சி மற்றும் நோய்கள் கட்டுப்படும். எனவே, இயற்கை விவசாயம் செய்பவர்கள் கைத்தெளிப்பானைப் பயன்படுத்துவது நல்லது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick