விளையும் விலையும்! - சந்தைக்கு வழிகாட்டும் தொடர் - 19

இயற்கைச் சந்தையைப் பரவலாக்குவோம்!சந்தைஅனந்து, தொகுப்பு: க.சரவணன்

வெகுஜனச் சந்தைக்குப் பின்னால் இருக்கும் அரசியல், வெற்றிகரமான இயற்கை விவசாயச் சந்தைகள் மற்றும் மாற்றுச் சந்தைகளுக்கான வாய்ப்புகள் குறித்து அலசும் தொடர் இது...

இயற்கை விளைபொருள்களுக்கான சந்தையில்... அந்தப் பொருள்கள்மீது நுகர்வோருக்கு நம்பகத்தன்மையை உருவாக்குவது பெரும் சவாலான விஷயம். பெரும்பாலும், ‘அங்ககச் சான்றிதழ் இருந்தால்தான் அது இயற்கைப்பொருள்’ என்ற எண்ணம் மக்களிடம் உள்ளது. ஆனால், சான்றிதழ் பெறுவதற்கு விவசாயிகள் கணிசமான தொகையைச் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. மேலும், சிக்கலான வழிமுறைகளையும் பின்பற்ற வேண்டியுள்ளது. ஆனால், நுகர்வோரிடையே விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதோடு, எந்த விவசாயியிடம் இருந்து விளைபொருள் தருவிக்கப்பட்டது என்பதை வெளிப்படையாக அறிவிப்பதன்மூலம் நம்பகத்தன்மையை ஏற்படுத்த முடியும். அதோடு, அனைவருக்கும் நன்மை பயக்கும் விதமாகவும் சந்தை அமைய வேண்டும். இப்படிப்பட்ட செயல்பாடுகளுடன் வெற்றிகரமாக இயங்கும் சில அமைப்புகள் பற்றி ஏற்கெனவே பார்த்திருக்கிறோம். அப்படிப்பட்ட அமைப்புகள் மற்றும் இயற்கை அங்காடிகளின் செயல்பாடுகளைத் தெரிந்துகொண்டு... நம்முடைய பகுதிக்கும் சூழலுக்கும் ஏற்ற வகையில் சில விஷயங்களை மாற்றிச் செயல்படத் துவங்கலாம். இயற்கைச் சந்தைகளை ஓர் இயக்கமாக மக்களிடம் கொண்டு செல்ல வேண்டியது அவசியம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick