நிலம்... நீர்... நீதி! - சீரமைக்கப்பட்ட ஏரிகள்... சிலாகிக்கும் மக்கள்!

சுற்றுச்சூழல் பசுமைக் குழு படங்கள்: தே.அசோக்குமார்

“போன 2015-ம் வருஷம், ஊரைச் சுத்தி இருக்கிற மூணு ஏரிகளும் உடைச்சுக்கிட்டு ஊருக்குள்ள தண்ணி புகுந்தப்ப, நாங்க பட்டபாடு இருக்கே, அப்பப்பா... சொல்லி மாளாது. வீடுகளுக்குள்ள எல்லாம் தண்ணி... அதோடு பாம்பு, தேள், பூரான்னு பிராணிகளும் வீடுகளுக்குள்ள புகுந்துடுச்சு. சின்னப்பிள்ளைகளையெல்லாம் காப்பாத்த ஒரு வாரம் நாங்க பட்டபாடு இருக்கே. இப்போ சொன்னாலும் குலை நடுங்குது. இந்த வருஷமும் அதே அளவு மழைதான். ஆனா, எங்களுக்கு ஒரு சிரமமும் இல்லை. சரியான பருவத்துல விவசாயத்தை ஆரம்பிச்சுட்டோம். அதுக்குக் காரணம் ஆனந்த விகடனடோ நிலம் நீர் நீதி திட்டம்தான்” என்று சிலாகிக்கிறார்கள் காஞ்சிபுரம் மாவட்டம், சாலமங்கலம் ஊராட்சியைச் சேர்ந்த பொதுமக்கள்.

இரண்டாண்டுகளுக்குமுன் சென்னையை மூழ்கடித்த பெருவெள்ளத்துக்குப் பிறகு, வாசகர்களின் பங்களிப்போடு விகடன் முன்னெடுத்த திட்டம்தான் நிலம் நீர் நீதி. இத்திட்டத்தின்படி நீரியல் மற்றும் சூழலியல் நிபுணர்கள் சாலமங்கலம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வுமுடிவின்படி, இயற்கை கொடுக்கும் தானமான மழைநீர், வெள்ளமெனப் பெருக்கெடுத்து ஊரைச் சிதைக்காமல், பக்குவமாகச் சேமித்து, விவசாயம் மற்றும் குடிநீருக்குப் பயன்படும் வகையில் ஏரிகளைச் சீரமைப்பது என்று முடிவானது.

சாலமங்கலம் ஊராட்சியில் உள்ள நரியம்பாக்கம் ஏரி, சிறுமாத்தூர் ஏரி, சாலமங்கலம் ஏரி ஆகியவற்றை அரசுத் துறைகளின் அனுமதியோடு சீரமைக்கும்பணி ஆரம்பமானது. 2016-ம் ஆண்டு, ஜூலை மாதம் தொடங்கப்பட்ட பணிகள் குறித்து, விகடன் குழும இதழ்களில் தொடர்ந்து பகிர்ந்து வருகிறோம். அடுத்தகட்டப் பணிகள் குறித்த விவரங்கள் இங்கே...

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick