மூடுவிழாவுக்குத் தயாராகும் ஆராய்ச்சி நிலையங்கள்... - கொந்தளிப்பில் விவசாயிகள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: தே.தீட்ஷித்

திருச்சியில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையம், கோயம்புத்தூரில் உள்ள கரும்பு இனப்பெருக்க ஆராய்ச்சி மையம், சென்னையில் உள்ள உவர்நீர் மீன் ஆராய்ச்சி மையம் ஆகியவற்றைத் தமிழகத்தில் இருந்து வெளியேற்றி, வேறு ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைக்க முடிவு செய்துள்ளது மத்திய அரசு. இதனால், தமிழகத்தைச் சேர்ந்த வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் விவசாயிகள் அதிர்ச்சியில் உள்ளனர். மத்திய அரசின் இச்செயல்பாட்டுக்கு விவசாயிகள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் கீழ் இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் வேளாண்மை சார்ந்த 103 ஆராய்ச்சி நிறுவனங்கள் செயல்பட்டுவருகின்றன. இவற்றுக்கான செலவுகளைக் குறைக்க நடவடிக்கை எடுத்த ‘நிதி ஆயோக்’ அமைப்பு, இந்தியாவில் 43 ஆராய்ச்சி நிறுவனங்களை மூடிவிடலாம் என மத்திய அரசுக்குப் பரிந்துரை செய்துள்ளது. இவற்றில் தமிழகத்தில் இயங்கக்கூடிய மூன்று ஆராய்ச்சி மையங்களும் அடக்கம். முதல்கட்டமாக, இந்த ஆராய்ச்சி மையங்களின் சுய அதிகாரத்தைப் பறித்து, சாதாரண கிளை நிறுவனமாக மாற்றி, செயல்பாடுகளை முடக்குவதற்கான நடவடிக்கைகள் தொடங்கப்பட்டுள்ளன.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick