மூழ்கிய நெற்பயிர்கள் - கைவிட்ட குடிமராமத்து... கலக்கத்தில் விவசாயிகள்!

பிரச்னைகு.ராமகிருஷ்ணன், படங்கள்: க.சதீஷ்குமார்

‘பெய்ந்தும் கெடுக்கும்... காய்ந்தும் கெடுக்கும்’ என்று கிராமங்களில் சொல்வார்கள். இதன்படி கடந்த சில ஆண்டுகளாகக் கடுமையான வறட்சியால் டெல்டா மாவட்டங்களில் நெல் சாகுபடி பொய்த்துப்போய் கடும் நெருக்கடிக்கு ஆளானார்கள் விவசாயிகள். இந்த ஆண்டு வடகிழக்குப் பருவமழை கைகொடுக்கும் என நம்பி நெல் சாகுபடியில் ஈடுபட்டனர் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள். ஆனால், பரவலாகப் பெய்த பருவமழையால் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பில் நெல் பயிர்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுப் பாதிப்புக்குள்ளாகியிருக்கின்றன.

“பயிர்ப் பாதிப்புக்கு இயற்கையைக் குறைசொல்ல முடியாது. வடகிழக்குப் பருவமழைக்கு முன்பே, நீர்நிலைகளைத் தூர்வாரும் பணிகளை அரசாங்கம் சரியாகச் செய்திருந்தால், வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டிருக்காது’’ என்று குற்றம் சாட்டுகிறார்கள் பாதிக்கப்பட்டிருக்கும் விவசாயிகள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick