எதிர்பார்த்தது 20... விளைந்தது 16... - மக்காச்சோள மகசூல் விளக்கம்! | Maize Yield - Explanation by the cultivator - Pasumai Vikatan | பசுமை விகடன்

எதிர்பார்த்தது 20... விளைந்தது 16... - மக்காச்சோள மகசூல் விளக்கம்!

விளக்கம்கு.ராமகிருஷ்ணன்

டந்த 25.11.2017 தேதியிட்ட ‘பசுமை விகடன்’ இதழில்... ‘ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வருமானத்தோடு மண்ணுக்கும் உரமாகும் மக்காச்சோளம்’ என்ற தலைப்பில், தஞ்சாவூர் மாவட்டம், மாத்தூரைச் சேர்ந்த விவசாயி பிரதாபனின் இயற்கை விவசாயம் குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது.

அதில், ‘அறுவடை செய்றப்போ எப்படியும் 20 குவிண்டால் அளவுக்கு மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். ஒரு குவிண்டாலுக்குக் குறைந்தபட்சமா 2,500 ரூபாய் விலை கிடைச்சாலே 50 ஆயிரம் ரூபாய் கிடைச்சுடும்’ என்று விவசாயி சொல்லியிருந்தார் பிரதாபன்.

கட்டுரையைப் படித்துவிட்டு நம்மைத் தொடர்புகொண்ட வாசகர்கள் சிலர், ‘‘மக்காச்சோளத்தில் இவ்வளவு மகசூல் கிடைக்க வாய்ப்பில்லை’’ என்று வலியுறுத்திச் சொன்னார்கள். இதையடுத்து, பிரதாபனிடம் பேசியபோது, “அறுவடை முடிஞ்சுடிச்சி. வளமான காவிரிப்படுகை நிலம்கிறதால செழிப்பான விளைச்சல் கொடுக்கும்கிற நம்பிக்கையிலதான் ஏக்கருக்கு 20 குவிண்டாலுக்குமேல மகசூல் எடுக்கலாம்னு சொல்லியிருந்தேன்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick